வாரீருய்விக்கும்மார்க்கம்

   

மோஹன ராகம்
ஆதி தாளம்

பல்லவி

வாரீருய்விக்கும்மார்கம் இதுவே மற்றறிவீர்
வாரீருய்விக்கு மார்க்கம்

அநுபல்லவி

வாரீர் பரந்தாமனைச் சேரீர் நல்லவழி இந்தப்
பாரில் வேறில்லையுள்ளம் தேரீர் நற்காலமிது [வா]

சரணங்கள்

ஆதிமூலமேயென்று ஆனை அழைத்தபோது
சோதி சொரூபமாய்வந் தாதரித்தாரிங்கே [வா]

விண்ணவர் பாலிடர் நண்ணாதடிக்கு மெங்கள்
அண்ணல் கோபாலனடி எண்ணாதார்க்கில்லைகதி [வா]

மைவண்ணன் நாமமல்லால் உய்பவர்க்கில்லைவேறு
பொய் மதங்களை நம்பி அய்யோ அலையாதீர் [வா]

பாசப ந்தங்களதை நாசமாய்ச் செய்திடும்
தோஷபோக்கியனுக்கு தாஸனாய் உய்மினீர் [வா]

பக்ஷிவாகனன்மேலே இச்சைவைத்தவர் கட்கே
இச்சகன்தனிலேயார் இச்சையிடாதவரும் [வா]

அண்டர் முனிவர்தொழும் புண்டரீகாக்ஷனை
தெண்டமிடாதோன் எம தண்டனைக்குள்ளாவான்[வா]

படங்களோராயிரமார்--குடைநிழலிலேயார்
நடனகோபாலனடிவிடாது பாடியாடுவோம் [வா]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube