| |
|
வந்துகடாக்ஷிப்பானோ சொல்லாய்
|
|
செஞ்சுருட்டி ராகம் ஆதி தாளம்
பல்லவி
வந்துகடாக்ஷிப்பானோ சொல்லாய்
அநுபல்லவி
இந்துமுகியே கண்ணன்
இந்துமுகியே கண்ணன் [வந்து]
சரணங்கள்
வந்தனங்கள் செய்திடும்
எந்தம்சிந்தை நோய் தீர [வ]
பிருந்தாவன லோலன்
சிந்தைமகிழந் தெமதிடம் [வ]
கூடிமகிழமனங்கொண்டு
தேடியோடி நமதிடம் [வ]
பாடியோர்கள் உய்ந்திட
நாடியோடி நமதிடம் [வ]
பக்தவத்சலன் நம்பால்
சித்தம்வைத்திப்போது ஓடி [வ]
முத்தர் நித்திய ருள்ளம் வாழ்
பத்தராவியெம்மை நாடி [வ]
குண்டலிசயனன் கோ
தண்டபாணிநம்மை நாடி [வ]
இண்டர்வீடுகளில் வெண்ணெய்
உண்டவாயன் எம்மை நாடி [வ]
பாதபங்கயங்களை யிம்
மாதர்கண்டுஜ் ஜீவித்திட [வ]
போதனைபுரிந்ததை யிப்
போதுகிருஷ்ணன் நினைந்தோடி [வ]
கரியைக்கா த்திடுங் கருணை
அரியிவன் தா னென்ன [வ]
தெரிவையர்கோ லங்களை
தெரிந்தோடி நம்மை மன்ன [வ]
காளைக்கொண்டளந்த கருங்
காளையோடி யெங்கள்பாலில் [வ]
வேளை அவன் தெரிவானோ
நாளைக்குநா மிருப்போமோ [வ]
மழையைத்தடுத்து நம்மை
பிழைக்கவைத்திடும் துரை [வ]
மழையிலாப் பயிர்போல
அழகிழந்தோமே அச்சோ [வ]
விண்மாரி தடுத்தவன் நம்
கண்மாரி தடுக்கவோடி [வ]
பெண்களுக்கோர் நிதிகாட்டி
கண்களைக்கொள்ளுமா தெய்வம் [வ]
கொள்ளைகொண்டோடியே சென்ற
வள்ளல் எங்கள் கோபாலன் [வ]
வெள்ளத்தினுள்ளாய நம்பால்
உள்ளங்கள்ளமின்றி வைத்து [வ]
வடபத்ராரியர் தந்த
நடனகோபாலகிருஷ்ணன் [வ]
படவல்குல்மட நல்லார்
இடமுமிடமாக் கொள்வோன் [வ]
வந்துகடாக்ஷிப்பானோ சொல்லாய்
இந்துமுகியே கண்ணன் இந்துமுகியே[வ]
|
|