வாடி சகியே சற்றே

   

சுருட்டி ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

வாடிசகியே சற்றே மனம்வைத்து நீபோடி
வாடி நீயென்தன் மனம் கூடிமகிழப்போடி [வா]

நினைக்கும்போதெல்லாம் என்னுடல் நெருப்பாயெரியுதே
மனக் கவலை தீராய்பாவாய் மையல் விரியுதே [வா]

உன்னைவிட யாரடியே யுதவிசெய்வோரையோ
முன்னூவினையிதுவடியே மொழிவது தான் பொய்யோ [வா]

சொல்லச்சொல்ல மறுமொழி சொல்லாமலிருக்கின்றாய்
செல்வச்சுவாமியைக்கண்டால் ஜென்மமீடேறுமென்றாய் [வா]

ஒருதுணையும் காணோமேடி யுதவிசெய்வாய் காவாய்
திருவடியே தஞ்சமல்லால் திக்குண்டோ சொல் பாவாய் [வா]

கண்டாலும் கலிதீருமடி கார்மேனியன்றனை
கொண்டாடுமன்பர்களைக் கொண்டாடும் கோவலன்றாளை [வா ]

எத்தவத்தையியற்றினமோ இத்தெய்வத்தைப்பெறவே
நற்றவத்தோர்க்கே யருளும் நல்லவருளுறவே [வா]

அதிகமாகுதே யென்செய்வோம் அச்சுதன்மேலாசை
கதிவேறில்லை ஆகையினால் கிட்டிச்செய்குவாய் பூசை [வா]

கோலதன்மேலே கண்வளருங் கோபாலனேடி
ஆலிலைமேலும் துயிலும் ஆதிப்பரமனேடி [வா]

உண்டுபண்ணும் அண்டர்கோவைக் கண்டழைத்துவாடி
தொண்டுபுரிவார் நமக்குத் துணைசெய்ய நீபோடி [வா]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube