| |
|
வாயாடாதிருந்திடலாமோ
|
|
நாதநாமகிரியா ராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
வாயாடாதிருந்திடலாமோ உன்னை
மருவாமலே வீண்போராடலாமோ க்ருஷ்ணா [வா]
பற்றிக்கொண்டவன் நீயலவோ ஒன்றும்
பகராமலிருக்கிற திதுவம்பலவோ க்ருஷ்னா [வா]
நீசெய்கிறது கொடுமை இங்கே
நின்றிடும் பெண்களெல்லாமுனடிமை க்ருஷ்ணா [வா]
இனிச் சகிக்கமுடியாது மோச
மெண்ணாதேவுன்தனை நாம் விடுவதேது க்ருஷ்ணா [வா]
மங்கையர்கள் மிஞ்சொணாது மோக
மனத்தினராயடிக்கடி கெஞ்சொணாது க்ருஷ்ணா [வா]
ஏன் நீ எம்பாலிலே வந்தாய் வந்து
இமிசைக்கா ளாக்கியே யெண்ணமறந்தாய் க்ருஷ்ணா [வா]
மறந்தாலரசேயாமென் செய்வோம் உன்தன்
மலர்த்திருப்பாதம் விட்டெப்படியுய்வோம் க்ருஷ்ணா [வா]
உய்யவேறு மார்க்கமறியோம் ஆ
உன்றனைவிட்டுநா மொன்றையுங்குறியோம் க்ருஷ்ணா [வா]
நினைக்கநினைக்க எம் நெஞ்சம் துக்க
நீரில் மூழ்குதேயினியெனறோயும் வஞ்சம் க்ருஷ்ணா [வா]
இகழ்தரும் இவ்வநியாயம் இனி
யெங்களிடத்தில் செல்லாதுன்றன் மாயம் க்ருஷ்ணா [வா]
யோசனையாலென்ன செய்வாய் இதை
யூகித்துணர்ந்தாவதருள் மழைபெய்வாய் க்ருஷ்ணா [வா]
அரிவையர் கைபற்றுங்கையா நீங்கள்
அஞ்சாதீர்களென்றருள் செய்யைய்யா க்ருஷ்ணா [வா]
கண்சாடையாலேனும் சொல்லாய் உன்றன்
கனிவாயால் சொல்லியசொற்படி நில்லாய் க்ருஷ்ணா [வா]
எங்களான்ம நாதனாய தேவா
இரங்காமலிருந்திட லாமோ தூய க்ருஷ்ணா [வா]
தலைவிரிகோலம தானோம் இந்தச்
சாலத்தொழிலினை யெண்ணாதுபோனோம் க்ருஷ்ணா [வா]
நாமியற்றியவினை தானோ இனி
நாதவுன் பக்கலினவில்கின் றதேனோ க்ருஷ்ணா [வா]
நடனகோபால நம் தேவா நம்மை
நாடிமிகநன்று ஈந்தாய்காண் ஆவா க்ருஷ்ணா [வா]
|
|