| |
|
வாழி திருநாமம்
|
|
|
ஆனிதனில் அனுஷத்தில் அவதரித்தோன் வாழியே
ஆளவந்தார்க் குபதேசம் அளித்தருள்வோன் வாழியே
பானுதர்க்கில் கன்டன்சொல் பலமுரைத்தான் வாழியே
பராங்குஸனார் சொல்ப்ரபந்தம் பரிந்துகற்றான் வாழியே
கானமுரை தாலத்தி கன்டிசைத்தான் வாழியே
கருணையினால் உபதேசம் கதியழித்தான் வாழியே
நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே
நலந்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே
மச்சனியும் மதிலரங்கன் வாழவந்தான் வாழியே
மறைநான்கு ஓரிரவில் மகிழ்ந்துகற்றான் வாழியே
பச்சையிட்டு ராமர்பா தம் பகருமவன் வாழியே
பாடியதோர் ஏடேற பரர்வைசெய்தான் வாழியே
கச்சிநகர் மாயனிரு கழல்பணிவோன் வாழியே
கடக உத்திராடத்தில் காலுசித்தான் வாழியே
அச்சமலர் மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அணைவர் தம் வாழியே
சீராரும் குருகைநகர் சிறக்கவந்தான் வாழியே
சிறந்த வடபத்ராரியர்திருவடிகள் வாழியே
காராரும் கருணைநம்பி கழல்பணிவோம் வாழியே
ஏராரும் பாஷ்யத்தை யியம்புமவன் வாழியே
எழில்வதரியாச் சிராமம் தொழுதவள்ளல் வாழியே
நாவில்தான் வில்மைந்தனை நவின்றுரைப்பான் வாழியே
நலந்திகழும் சடகோபன் நற்பதங்கள் வாழியே
சிறந்த சடகோபாரியர் புத்திரனார் வாழியே வாழியே
ஆவணி மிருகசீருஷத்தில் அவதரித்தான் வாழியே
பாராரும் பாஷ்யத்தை பார்வைசெய்தான் வாழியே
பார்முழுதும் யீடுதனை பரிந்துகற்றான் வாழியே
ஏராரும் நாதமுனி பதம்பணிவோம் வாழியே
எங்கள் வடபத்ராரியர் ஏனதூளி வாழியே
|
|