உபயகாவேரி நடுவார்

   

பூபாள ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

உபயகாவேரி நடுவார் அபயஸ்தனைப்பாராய்
கபம்வந்தடை நேரத்தில் காப்பவனார் பாராய் [உ]

நரசிங்கமான ஸ்ரீமந் நாராயணனைப் பாராய்
பரமபாதநாதன் பக்தவச்சலனைப் பாராய் [உ]

காளிங்கமேலாடிய நம்கருமுகிலைப் பாராய்
நாளிங்கே பாழாகுதே நம்நாயகனைப் பாராய் [உ]

உலகளந்ததிருவடி யுடையவனைப் பாராய்
அலர்மைல்மங்கைநாதனுக் காளாகலாம் நீ பாராய் [உ]

பாற்கடலின்மேற்பரவும் பரமனை நீபாராய்
பார்க்கவனந்தம் கண்வேண்டும் பக்தியுடன் பாராய் [உ]

துக்கவினை நீங்கிடநம் தோழிநீபோய்ப் பாராய்
அக்கப்பாடு செய்திடாதெம் ஆசை தீரப் பாராய் [உ]

ஜெகஜ்ஜோதி ரூபனேடி சீக்கிரம்போய்ப் பாராய்
அகமயங்கு தென்னசெய்வோம் ஆதரிக்கப் பாராய் [உ]

கோல்வேணுகைகொண்ட குடக்கூத்தனை நீ பாராய்
மேல்விழுந் தானந்தம் தந்தவிட்டுணுவைப் பாராய் [உ]

புண்டரீகக்கண்ணனைப் போதுபோமுன்னம் பாராய்
தொண்டருளமே கோயிலாகக் கொண்டவனடி பாராய் [உ]

சொக்குதே சொக்குதே கிருட்டிணன் தோளழகிற்றோழி
திக்குவேறில்லை இல்லை சேவடிமலர்கள் வாழி [உ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube