| |
|
உபய காவேரிவாஸா
|
|
ஆரபி ராகம் ஆதி தாளம்
பல்லவி
உபய காவேரிவாஸா உலகுண் டுமிழ்ந்த நேஸா
அபயஸ்தம் தாராயெங்கள் அன்பனே
அநுபல்லவி
அடியார்மேல் அன்புவைத்தவரல்லல் நீக்கிடும்�
படியளந்த மலர்பாதனே
சரணங்கள்
உருகும் மனத்தாயுன் அருகில் வந்து பாட
திருஉள்ளம் வைப்பாய் தென்னரங்கனே
வலைமான்போலவே மாயைதன்னில் மயங்கும் எம்மை
அலைவிடாதாளாய் அச்சாவோ [உ]
அன்போடுன் அடிமலர் ஆசைகொண்டாடும் நம்மேல்
அன்புவைத்தாளாந் எம் அழகனே
நெஞ்சையுருக்கி உன்னையே நினைக்கும் எம்மை
வஞ்சகம் செய்யலாமோ வாமனா [உ]
̫பூலோக வைகுந்தனே பொன்னரங்கனே எம்மை
ஜாலம் செய்யாமலாளாய் சடுதியில்
எங்கும் நிறைந்தவனென்றேத்து மெம்பாலே நம்
ரெங்கநாதனாய் வாராய் ரெங்கேஸா [உ]
காரிருள் மேனியனே உன்று கதரும் நம்மை
பாரிலேகைவிடா பர்த்தாவே
உரகஸயனாஇங்கே ஓடிவாவேன்றோது நம்
இருவினை நீர்த்தாளாய் என்கோவே [உ]
ஆலிலைமேல் ஸயனா அடியாரை நோக்குநயனா
பாலகோபால வாராய் பண்பாக
பாண்டுரெங்கா வெனப்பாடும் அடியார்கள்
வேண்டும் வரம்கொடுக்கும் விமலாவோ [உ]
காளிங்கன் மேலாடும் கண்ணாவோ வெனப்பாடும்
ஏழைகளைக் காராய் இக்ஷணமே
ஆக்களை மேய்த்துவரும் ஆயர்பாலா உன்னை
நோக்கிப்பாடு மெம்மை நோக்காயோ [உ]
உரியில்வைத்த வெண்ணெயை யொக்கயெடுத்துண்ட
ஹரியேவா வெனச்சொல்வார் அடியவர்
வைகை பவனிவரும் மாலிரும்சோலை யெந்தாய்
அய்யனே என்றோதுவோம் அடியோங்கள் [உ]
பார்த்துப் பழவினையைத் தீர்த்தருளாயென்று
ஏத்தித் தொழுவோம் நாங்கள் எப்போதும்
அண்டபிண்டங்களே யுண்டாக்கும் ஹரியே--யிம்
மண்டலத்தார் கண்டிடவா மகிழ்வோடு [உ]
கோபியர் கோபாலர்கள்கொண்டாடும் கொண்டலே நம்
பாபவினை கடனைப் பாழாக்காய்
அரவணையோனே யெனவாடி பாடுமெங்கள்
பரம புருஷா அபயோததியோனே [உ]
கபடமில்லாதவனாய் காத்தருள்வாய் எம்மை
கபடநாடக சூத்திரதாரியே
விண்ணோர்களுக்கமுதம்
பெண்ணாயளித்திடும் எம்
கண்ணனே வா எங்கள் கண் முன்னம் [உ]
அவதாரங்களைப்பண்ணி அவனியின் பாரம் தீர்த்த
நவமோஹனாங்கா நம்மை நாடாயே
கோலைக் கையிலே கொண்டு கோக்களை மேய்த்துவரும்
பாலகோபாலா நம்பால் வாராய் [உ]
அஞ்சனமேனியானே வஞ்சமிலா தவனே
அஞ்சலி செய்தோம் உன்னை அருளாயே
மண்ணிலுடலெடுத்து கண்ணிழந்த மாடாய்
பண்ணினேனெண்ணிலாத பாவம் யான் [உ]
பீதாம்பரதாரா நம் பிழைபொறுத்தாளாய்
சீதாராமா வென்று உனை செப்புவோமே
நிலமளந்தவனே நின்றாள் மலரை நம்பினோம்
கலகபவநோயை கழிப்பாயே [உ]
உத்தரகிரி வாழும் உத்தமனே என்றுனை
எத்தேச காலமும் நாமியம்புவோம்
பக்தர்களாய் உனை நித்தியமாய்க்கொள்வோம்
அத்திகிரி வாழும் அரசனே [உ]
ததிபாண்டனுக்கு மோக்ஷம் தந்த தயாமூர்த்தியே
கதியுனதடி யல்லாலில்லையே
உன்னடி மலருக்கே உருகிப்பாடுவோம்
முன்னைவினைக்கடனை முடிப்பாயே [உ]
வேணுகோபாலனே வா விஷ்ணுவே வாவென
நாணமில்லாமல் சொல்வோம் நாடோரும்
எட்டெழுத்தோதுமவ ரிருவினை மரத்தின்வேர்
வெட்டி விழுத்தாட்டும் விமலனே [உ]
ஆசார்யர் திருவடி அடைந்தவர்கே மன
மாசறும் என நல்லோர் வாய் வழுத்தும்
பாகவத பக்தியுடைய நற்புத்தியுள்ளோர்
சோகமில்லா தவராய்ச் சுகமடைவார் [உ]
காகாசுரனுக்கொரு கண்ணைத்தந்த எங்கள்
காகுத்தனே வாராய் கதி நீயே
சேதுபந்தனம் செய்த சீதாராமா உந்தன்
பாதார விந்தம் நமக்காதாரம் [உ]
கைவிட நினையாதே கர்த்தா உன்றனையே நாம்
பொய்யின்றி நம்பினோம்காண் பூலோகத்தில்
ஆழ்வாராசாரியர்களாலே விளங்குமுன்னை
நாள்தோறும் போற்றுமவர் நல்லாரே [உ]
வடபத்ராசாரியராய் வந்த மாலிருஞ்சோலை
நடனகோபால நம்பெருமாளே
நம்பெருமாளேயுனையே நம்பினோம் புத்தூர்
எம்பெருமானாரிணையடி பலத்தால். [உ]
|
|