தோழி கண்ணபிரானெங்கே

   

கரகப்ரியா ராகம்
ஆதி தாளம்

பல்லவி

தோழி கண்ணபிரானெங்கே யென் தோழி (கண்ணன்)

அநுபல்லவவி

ஆழிவண்ணன் நம்பாலருளிய தெல்லாமெங்கே தோழி [க]

சரணங்கள்

உய்தோம் நாமென்றிருந்தோமே
நைந்துபோனோமே ஐயோ தோழி [க]

நந்தகோபன் மருகியாயமர்ந்ததிதற்கோ வையோ தோழி [க]

கண்ணும் கபாடமடைக்கா தெண்ணம் வைத்துக் கூடினோமே தோழி [க]

புண்ணிய சொரூபனை நாம் நண்ணிவிளையாடினோமே தோழி [க]

உயிரும் உடலும்போல வுண்மைமிகுந்திருந்தோமே தோழி [க]

பயிர் நீரின்றிவாடுவதுபோல் பாரில்மிக நொந்தோமே தோழி [க]

தடைக்குள் நிற்காமல்மீறித் தாண்மலர் பணிந்தோமே தோழி [க]

அடைக்காயமுதளித் தடிப்பொடியணிந்தோமே தோழி [க]

இவனே தெய்வமென நாம் புவனம் மறந்தோமே தோழி [க]

சிவனயனுக்கு மெட்டாதவன் நம்கையிருந்தானே தோழி [க]

வந்துநம் சிந்தையிருந்தானந்தம் தந்தானே தோழி [க]

இந்துமுகச்சேவையைப் பிரிந்துசிந்தை நொந்தோமே தோழி [க]

மேகலைவளைமலர் மைவிரோதமாய்ப் போச்சே தோழி [க]

ஏகமாயிருந்தோமே யெம்காலமிப்படியாச்சே தோழி [க]

பாதம் கண்வாய் கரம்வுந்தி மரைப்பூவே தோழி [க]

வேதம் அருளிய விமலன் வினைகாய் நாமன் தோழி [க]

பஞ்சபாண்டவர்கள் நெஞ்சஞ்சல் பாழாக்கினவன் தோழி [க]

செஞ்சரணமளித்தெம் தீவினையறுத்தவன் தோழி [க]

கொங்கைமங்கையரா யிக்குவலயத்தேன் பிறந்தோம் தோழி [க]

செங்கையா லணைக்காவிடில் சோர்ந்தோம் வைகுந்தமிதோ தோழி [க]

வெண்ணெய் மகிழ்ந்துண்பவன் விருப்பம் இப்படியாமோ தோழி [க]

பெண்ணை வலத்தில்வைத்த பெருமானுக்கீ தாமோ தோழி [க]

அன்பர்பாலகப்படுவா னென்பரிவைதாமோ தோழி [க]

இன்பந்தரும் அதரக்கனியை யிழந்தேனோ தோழி [க]

கருணையுடனேவந்து கண்ணீர் துடைப்பானே தோழி [க]

அவனிருகைகளாலே எடுத்தெம்மையணைப்பானே தோழி [க]

எண்ணிக்கண்திறக்குமுன் னெதிர்வந்து நிற்பானே தோழி [க]

எண்ணியவெண்ணத்தின்படி யெம்மோடிருப்பானே தோழி [க]

கடத்தேற்றவல்ல நன்னடக்கை கடாக்ஷிப்பவன் தோழி [க]

வடபத்ராரியர்வாழ் வைகுந்தமடைவிப்பவன் தோழி [க]

சாது நடனஞ்செயும்தாண் மலருடையவன் தோழி [க]

மா தவன் நம்மைநாடி வந்தாலிப்போ துய்வோம் தோழி [க]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube