தீராதேயிச்சன்மம்விட்டுத்

   

கேதார ராகம்
திரிபுடை பாளம்

கண்ணிகள்

தீராதேயிச்சன்மம்விட்டுத் திரும்பினாலும் தோழி
ஆராலேயீ தா றுமடி அய்யோ வந்தோ தோழி [தீ]

எல்லாம் அவனே நமக்கீ தறியாயோ தோழி
நல்லார் பொல்லார் எல்லார்க்கும் நாதனேடி தோழி [தீ]

நாதனவன் நங்கள்பிராண நாயகனேடி தோழி
வேதங்கள் நின்று துதிக்கும் விமலனேடி தோழி [தீ]

பேதநினைவில்லாத பிராணேசனேடி தோழி
பாதகம்யார்க்குச் செய்தோமோ பலித்ததேடி தோழி [தீ]

செய்தவினை செய்தவர்க்கே சேருமடி தோழி
கை தவம்செய்தானென நாம் கதறலாமோ தோழி [தீ]

ஐவர்களைக் கண்ணுக்குள் வைத் தாண்டவனேடி தோழி
மெய்வருந்தத் தவம்புரிந்தால் மீளுவானோ தோழி [தீ]

நாமசங்கீர்த்தனமல்லால் நமக்கு வேறுண்டோ தோழி
பாமரரறிவாரோ தவம்பயிலுவாரோ தோழி [தீ]

நினைந்துருகிப்பணிவதே நிசமாம் தவம் நீயறிவாய்
அனைமுலைப்பா லுணும்போதே அறிவான் தயைபுரிவாய் [தீ]

கோவர்த்தன கிரியெடுத்த கிருட்டிணனேடி தோழி
மூவர்க்கும் முதல்வனாம் முகுந்தனேடி தோழி [தீ]

படமதன்மேல் நடனம்செய்த பாதனேடி தோழி
நடனெகோபாலனென்ற திருநாமனேடி தோழி [தீ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube