| |
|
சொன்ன சொல்லினைத்
|
|
நாதநாமக்ரியா இராகம் ஆதி தாளம்
பல்லவி
சொன்ன சொல்லினைத் தவறலாகாதே காண்
அநுபல்லவி
என்ன சொல்லுவோம் உனகக்கென்ன சொல்லுவோம்
சரணங்கள்
தாழ்விலாத ஸ்ரீ தாமோ தர கிருஷ்ணா
பாழ் உலகினைப் பகடி புரியுதே [சொ]
தேடித்தேடி நாமுன்தன் சேவடி பிடித்தோம்
கோடிபானுப்ரபை கொண்டமேனியா [சொ]
அய்யோ ஸ்ரீகிருஷ்ணா உன்மேலாசைகொண்டது
பொய்யோ என் செய்வோம் எங்கள் பூர்வ கர்மத்துக்கு [சொ]
கருணைவைத்தால் நம் கன்மமிருக்குமோ
அருணோதயத்தின்முன் இருளகலாதிருக்குமோ [சொ]
நயனங்கடோரும்வாழ் நடனகோபாலா எம்
பயமதையழித்துப் பாலனம் புரிவாய் [சொ]
|
|