| |
|
செல்வக் கோதை ஆண்டாள்
|
|
ஆனந்தபைரவி ராகம் ஸாபு தாளம்
பல்லவி
செல்வக் கோதை ஆண்டாள்
சேவடியை வணங்கென் நெஞ்சே
அநுபல்லவி
வல்வினை தீர்ப்பாள் உயர்மேல் வீடு சேர்ப்பாள்
நல்வாக்குத்தந்து காப்பாள் நங்களாயர்பாடிக்கொத்த
சரணங்கள்
தவமேதுக்கண்டாள் தாண்மலரடை வார்க்குவேறு
சிவனயனிந்திரன் தவமுனிவர்கள் தொழும்
புவன வைகுந்தனையே போற்றிக் கண்ணியளித்த [செ]
பெரியாழ்வாருக்குப் பிரிய புத்திரியாகி
ஹரி திருவடி பக்தி புரியும் நெறியே நாளாய்
திரிலோகங்களும் போற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழும் [செ]
அகிலங்களோய அவதாரம் செய்தாளே
பகவந் நாமங்களையே சுகஜீவனமாய்க் கொண்டு
ககவாகன வரங்கனுக்கே கண்ணியளித்த [செ]
எங்களாண்டாளைப்போல் இவ்வுலகில் யாரைக் காண்போம்
மங்களங்களை உண்டாக்கும் கொங்கையாளே
பாட்டுப்பாடி எங்களாயர்பாடி மாதரெல்லோரையும் ஈடேறவைத்த [செ]
புடவைகளைக்கொண்டு புன்னைமரத்தேறிய நம்
வடபத்ராரியர் போற்றும்
நடனகோபாலனெனும் கடக்கூத்தனை
ஆய்பாடி கோபியர் குறைவு தீர்த்த [செ]
|
|