சகியேசகியே ஹரியெங்கே

   

செஞ்சுருட்டி ராகம்
அட தாள- சாப்பு

கீழே *இந்த அடையாளம் உள்ளவையெல்லாம்
இரண்டு முறை பாடவேண்டும்

பல்லவி

சகியேசகியே ஹரியெங்கே சகியே ஹரியெங்ஹரியெங்க்
*சகிக்கக்கூட வில்லைபாராய் சகியே [ச]

அநுபல்லவி

*மகிஷிளென நம்மை வகித்திருந்தானே
*தகித்திட மனங்கொண்ட தேனோவேனோ [ச]

சரணங்கள்

*பாராய்பாராய் கண்ணனைச் சகியே
பார்த்துநாளாச்சுதென் சகியேசகியே பார்த்துநாளாச்
*ஆராவமுதன் அடிகளே சகியே
*அடியேற்குத்துணை நீயீதறி சகியே [ச]

*கதியார்கதியார் கண்ணனை யல்லால்
*காசினியின்மீது சொல்லாய் சொல்லாய்
*துதிசய்திடுங் கரியின் துயர்தீர்த்த
*துரைராஜகோபால னெங்கேயேத்த [ச]

இரவாய்ப்போனாலென் செய்வம் சகியே* என்செய்* நாமென்*
*எங்கேபோய்த் தேடுவம் சகியேசகியே
*துரைராஜகோபாலன் பதமல்லால்
*தொல்லுலகத்திலுண்டோ துணைநல்லாய் சொல்லாய் [ச]

*கன்றோடு ஆக்களுங்மதறுதே
*கண்ணனையெண்ணியென் உள்ளம்பதறுதே
*தின்று குழலூதும் திருமாலை
*நீபோ யழைத்துவா ஈதென்னவேலை [ச]

*வடபத்ரசாயி அரையர்வாழ்
*வைகுந்தனைச் சேரவிதுவேநாள்
*நடனகோபால நாதனைத்தேடு
*நம்மை நாடிவருவான் நீ போய்ப்பாடு [ச]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube