| |
|
ராசராசனே க்ருஷ்ணா
|
|
முகாரி இராகம் அட தாளம்
கண்ணிகள்
ராசராசனே க்ருஷ்ணா நாரணபூரணனே
நேசம்வைத்தோம்காண் க்ருஷ்ணா நித்தியமளிப்பவனே
தாசரதி ஸ்ரீ க்ருஷ்ணா தாள்மலரளிப்பாய் [ரா]
குற்றமென்செய்தோம் க்ருஷ்ணா கூடுவாயாண்டவனே
சித்தமறியாயோ க்ருஷ்ணா திருத்துழாழ் போண்டவனே
பற்றுவை பற்றினோம் க்ருஷ்ணா பாலித்தெமைச் சேராய் [ரா]
நிந்திப்படைந்தோம் க்ருஷ்ணா நீக்குவாயய்யனே
தொந்தமதானோம் க்ருஜ்ணா துன்பமறு மெய்நனே
சிந்தை மிகநொந்தோம் க்ருஷ்ணா தெரிவையர் முகம்பாராய்[ரா]
நடனகோபால க்ருஷ்ணா நம்பினோம் நாங்களய்யா
கடத்திடலாமோ க்ருஷ்ணா கருதினது பொய்யா
திடமொழிபுகழும் க்ருஷ்ணா தீவினையொழிப்பாய் [ரா]
|
|