| |
|
புருஷோத்தமன் எங்கள்
|
|
| நீலாம்பரி ராகம் ஆதி தாளம்
கீழே *இந்த அடையாளம் உள்ளவையெல்லாம்
இரண்டு முறை பாடவேண்டும்
கண்ணிகள்
புருஷோத்தமன் எங்கள்பிழை பொறுக்காவிடில் இப்
*புவியில் எப்படி உய்வோம் [பாங்கி]
ஒருநிமிஷம் பலயுகமாய்ப்படுத்துதே யெம்
*ஊழ்வினைக் கென்ன செய்வோம் [பா]
கல்லுங்கரைந்திடு மெங்கவலைமொழி
*கேட்கிலைகால பலனோவிது [பா]
புல்லும் புனலும் கொள்ளாமற் போகலாமோ ஆக்கள்
*பொல்லாங்கென் செய்த தந்தோ [பா]
மாகோபாலன் இக்கன்றாக்களை மறப்பானோ
*வழுத்தாயி தென்னமாயம் [பா]
ஆகோபிகாஸ்திரீகளைக் கண்ணனாதரவா
*யாளும் அன்பிது தானோ [பா]
நனவிலுங்கனவிலும் நாட்டங் கண்ணன்மேலே
*நாட்டி நம்பியிருந்தோம் [பா]
ஜனகராஜன் திருமகளைப் போலவே துக்க
*ஜலதியில் மூழ்கினோமே [பா]
கண்ணன் மோசஞ்செய்வானோ எவளோகாதல்
*காட்டப்பின்னே சென்றான் [பா]
அவன் செய்பூஜையே பூஜை அவன் பாக்கியமே பாக்கியம்
*அகிலமெல்லாம் அறைவோம் [பா]
நம்வயிற்றிலே பாலூற்றவந் நாரியிங்கே
*நாதனைத் தருவாளோ [பா]
எம்வலையிலை கண்ணன் சிக்கினானென்றெண்ணி நாம்
*இன்பமுற் றிருந்தோமே [பா]
அணைக்கப்பெற்றவள் கிருஷ்ணனை யழைத்துக்கொண்டு
*அடைவாளோ ஆ அந்தோ [பா]
மணமற்றபுஷ்பம்போல மாதவனில்லாமல் நாம்
*மகிமையற்றோமே அந்தோ [பா]
ஒருநாளாகிலும் நம்மைப்பிரிந்து கண்ணன்
*உள்ளம் வேறானதுண்டோ [பா]
இருவினையிலேயொரு வினையல்லவோ எம்மை
*இக்கோலமாக்கினது [பா]
திருவடித்தாமரை மலர்களல்லவோ ஆயர்
*தெரிவையர் தங்கள் பிராணன் [பா]
நெருப்போ நிலவோ ஆகாயத்தில் நிற்கின்றதித்தை
*நினது கண்கொண்டு பாராய் [பா]
வடபத்ரஸாயி ஆசாரியரை வணங்கினோம்
*வழிகிடைத்தது தோழி [பா]
நடனகோபால நாயகிமாரெனவேயிங்கே
*நாமும் பேர்படைத்தோமே [பா]
|
|