பேய்மனமே நாய்போல

   

கல்யாணி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

பேய்மனமே நாய்போலலையாதே
யெம்தெருமானடி சேர்

அநுபல்லவி

ஆயர் மகனாய் வந்துதித்த மாயனை மன்னு [பே]

சரணங்கள்

வாழ்விப்பவன் வேறில்லை கண்டாய் வாமனனல்லால்
வாழ்விப்பவன் வேறில்லை கண்டாய்
ஆழ்வார்கள் பாடலைக் கற்றோர்
வீழ்வாரோ நரகிலையோ [பே]

பூர்வாசாரியர் வழிசெல் போக்காதே காலம்
பூர்வாசாரியர் வழிசெல்
ஸாரமில்லா ஞான வழி
சேராதே சேராதே சொன்னேன் [பே]

கூடிக்கொள் அடியாருடனே கோதத் தேடி
கூடிக்கொள் அடியாருடனே
பீடிக்கும் வினைகளறும்
மோடி செய்யாதே இங்கே வா [பே]

மால்திரு மந்திரார்த்தத்தை கேளுமற்றில்லை தெய்வம்
மால்திரு மந்திரார்த்த்தை கேளு
ஆலிலைமேல் பள்ளிகொள்ளும்
மால்திருவடியில் வாழு [பே]

தத்துவம் மூன்றுணர்ந்து நீ பார் அத்துவிதமில்
தத்துவம் மூன்றுணர்ந்து நீ பார்
கற்றுணர்ந்தவர்கள் பால்
முத்திவழி கேட்டுக்கொள் [பே]

வடபத்ராரியரடியினை சேரு வழிகாட்டுவார்
வடபத்ராரியரடியினை சேரு
நடனகோபாலனை யல்லால்
கிடையா திவ்வுலகில் தெய்வம் [பே]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube