| |
|
பாராய் ஸ்ரீ கோபாலா
|
|
|
|
பல்லவி
பாராய் ஸ்ரீ கோபாலா முகவாட்டம்
பார்த்தானந்தம் தாராய் [பா]
அநுபல்லவி
சேராயெங்கள் துன்பந் தீராயுனைத்தவிர
வேறாநமக்கிங்கே வேகமதாகப் [பா]
சரணங்கள்
தேடுகையில் வாடினார் சிலபேர் இனி
திக்கார் நமக்கென்றார் சிலபேர்
பாடுகையிலாடினார் சிலபேர் யாங்கள்
பாவிகளானோமென்றார் சிலபேரன்பாய்ப் [பா]
தரைமேல் விழுந்தழுதார் சிலபேர் ஸ்ரீ கிருஷ்ணா
தழுவவாவென்றுரைத்தார் சிலபேர்
மரைத்தாளனேயென்றார் சிலபேர் எங்கள்
மணவாளனேயென்றார் சில பேரன்பாய்ப் [பா]
கோனே சீமானேயென்றார் சிலபேர் கண்ணனைக்
கூடுநாளெந்நாளென்றார் சிலபேர்
தேனேயெம்மானேயென்றார் சிலபேர் வாரீர்
சிக்கினானிதோவென்றார் சிலபேரன்பாய்ப் [பா]
ஓலமிட்டே நின்றார் சிலபேர் பிராணன்
ஒழிக்க நிச்சயஞ்செய்தார் சிலபேர்
காலமென் செய்வோமென்றார் சிலபேர் மாய்க்கும்
காதகனேயென்றார் சிலபேரன்பாய்ப் [பா]
கீர்த்தி நீங்குமேயென்றார் சிலபேர் நாம் கொண்ட
கருவமழித்தானென்றார் சிலபேர்
ஆர்த்திதீர்த்தாளுமென்றார் சிபேர் ஸ்ரீ
அரி அரி அரி யென்றார்சிலபேரன்பாய்ப் [பா]
கெடலாமோ நாங்களென்றார் சிலபேரையோ
கேளாதோ கிருஷ்ணாவென்றார் சிலபேர்
நடனகோபாலா வகன்றார் சிலபேர் ஸ்ரீமந்
நாராயணாவென்றார் சிலபேரன்பாய்ப் [பா]
|
|