| |
|
நீங்காது நீங்காது அடியாரைத்
|
|
மலஹரி ராகம் சாப்பு தாளம்
கண்ணிகள்
நீங்காது நீங்காது அடியாரைத் தூஷித்த பாவம்
நீங்காது நீங்காது பாங்காய் நீ கேள் நெஞ்சே [நீ]
கிட்டாது கிட்டாது துஷ்டர்க்கரிலோகம்
கிட்டாது கிட்டாது கெட்டுப் போகாதே நெஞ்சே [நீ]
தேராது தேராது ஸாரமில்லா ஞானம்
தேராது தேராது ஆயிர நாமம் சொல் [நீ]
வழியேது வழியேது பழித்திடுவார்க்கு நல்
வழியேது வழியேது தெளிவாய்ப் பாடு [நீ]
பண்ணாதே பண்ணாதே கண்ணணையன்றி த்யானம்
பண்ணாதே பண்ணாதே நண்ணா பாவம் [நீ]
உரையாதே உரையாதே ஹரிநாமத்தைவிட்டு வேறு
உரையாதே உரையாதே கரையேற்றுவதார் [நீ]
அடையார்கள் அடையார்கள் கெடு நடை
யுடையவர்கள் முக்தி
அடையார்கள் அடையார்கள் படைத்தானேன் அயன் [நீ]
சுகமேது சுகமேது ஜெகந்நாதனை விட்டுவிட்டால்
சுகமேது சுகமேது அகமே யீதறி [நீ]
கூடிவாழ் கூடிவாழ் அடியார்களுடனே நீ
கூடிவாழ் கூடிவாழ் நீடிய வினையறும் [நீ]
நடனம் செய் நடனம் செய் குடகூத்தனைப்பாடி
நடனம் செய் நடனம் செய் அடைந்திடுவாய் பரமபதம் [நீ]
|
|