நாயகனைப்பிரிந்த நங்கை

   

கல்யாணி இராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

நாயகனைப்பிரிந்த நங்கைமாரிருக்கலாமோ
காயமதை விட்டுவிட்டால் காணக்கிடைக்குமோ [நா]

இந்த வனியாயமதுபோ லெங்கேனுமுண்டோ
அந்தமிகும் கிருஷ்ணனைப்போ லவனியெங்குமுண்டோ [நா]

இன்பமே அருள்புரியும் இருடிகேசனேடி
துன்பவினை நீங்கும் துரிதமா யழைத்துவாடி [நா]

வினை நீக்கிக்கொள்ள நல்லவேளையிதுபோடி
மனைதோறும் புகுந்து வெண்ணையுண்டமா தவனேடி [நா]

அன்னைபிதாவா தியெல்லா மாயமர் ந்தோனேடி
உன்னைக்கண்டுடனே திருவுளமிரங்கும் போடி [நா]

யோசனை செய்யாமலே யொன்றே மனமாய்போடி
மோசம் செயமாட்டானேடி மூலவஸ்துவேடி [நா]

கட்டிமுத்தம் தந்த தங்கக்கட்டியடி போடி
அட்டியொன்றும் சொல்லாமல் அழைத்துவரப்போடி [நா]

போய்த்தேட நம்மால் முடிந்தால் புலம்புவமோ தோழி
போய்தேடமுடியாதுன் பொற்றாள் போற்றினோம் வாழி [நா]

ஓடிப்போயழைத்துவாடி யுலர்ந்துயிரேகா முன்
வாடிய எங்கள் வதனம் மலர்ந்திடநீ காமுன் [நா]

என்னசெய்வோம் ஈசனெம்மையிப்படித் துறந் தானே
முன்னம் என்னென்னமோ நம்பால்மொழிந்ததை மறந்தானே [நா]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube