| |
|
நானானேன் தானானேன்
|
|
கண்ணிகள்
தானானேன் தானானேன் நானானேன் நானானேன்
ஜானானெ எண் ஜானுடல் அருள் கண்ணா சாகாது நாதராலே
நாகலிங்கக் குருவாலே நாதமணி காலாட்டி
ஏகலிங்க வட்டத்திலே அருள் கண்ணா இருபாதம் கூடினேனே
இருபாதம் கூடினேன் ஈராறு கூட்டினபின்
திருவடி சேர்வதற்கு அருள் கண்ணா தெளிவாக கேளாயப்பா
தெளிவாகக் கேளாய் நீ திடவை ராக்கியமுடன்
ஒளிவிழி ரெண்டும் கூட்டி அருள் கண்ணா ஊர் நடு வாசலைப்பார்
ஊர் நடு வாசலிலே உடலொம்பது பீத்தல்
கார் நடும் சாலையிலே அருள் கண்ணா காலனவன் மாண்டுபோவான்
காலனவன் மாண்டக்கால் கல்பகோடி காலம்வரை
பாலசிறு மதலைபோல் அருள்கண்ணா பாருலகில் வாழலாமே
பாருலகில் வாழ்வதற்கு பரிமூல கல்பம் உண்டு
ஊரினில் கல்பமிட்டால் அருள் கண்ணா உடல்நிலை யாகாதப்பா
உடல்நிலை யாவதற்கு ஒன்பது பேராலே
கடல்நிலை செய்வோஎன்று அருள் கண்ணா
காசினியில் சித்தரானார்
காசினியில் சித்தரானார் கனத்த உடலெடுத்து
நாசிவெளி பாயாமலே அருள் கண்ணா நானொரு சித்தரானேன்
நானொரு சித்தரானேன் நாற்ற உடலெடுத்தேன்
ஊரினில் மதியாமைக்கு அருள் கண்ணா திடமா யிருக்கும் காயம்
திடமா யிருக்கும் காயம் ஜெப தபம் மறவாதே
ஜெடமது தீருமப்பா அருள் கண்ணா சாற்றுவேன் கேளாயப்பா
சாற்றுவேன் கேளாய் நீ சலியாதே ஐயா நீ
ஏத்துவது மிரவிமதி அருள் கண்ணா இருநதி
ஒன்றாய்ச் சேரும்
இருநதி ஒன்றாவதற்கு பெருமதி தன்னைக் கூட்டி
பின்கலையூதாயப்பா அருள் கண்ணா பின்கலை யூதாயப்பா
பின்கலை யூதினாக்கால் பிரபல வியாதியும் போய்
முன்மதி ஓடாதப்பா அருள் ண்ணா மூக்கடை
பட்டுப்போகும்
மூக்கடைப் பட்டுப்போகம் மும்மலம் அற்றுப் போகும்
தாக்காடை ஐம்புலனே அருள் கண்ணா தனிக்கயர் நாலு நாலு
தனிக்கயர் நாலுநாலே சகல மனித ரெல்லாம்
கனியாக தான்டுத்து அருள் கண்ணா காயம்
விழுகுமப்பா
காயம் விழுகாமல் கலைமணி காலாட்டி
நாகலிங்க குருவாலே அருள் கண்ணா நானெடுத் துரைத்தேன் கேள்
|
|