மிஞ்சுதேடி மோகமிங்கே

   

பிலஹரி ராகம்
ஆதி தாளம்

கண்ணிகள்

மிஞ்சுதேடி மோகமிங்கே மேகவண்ணன் மேலே
செஞ்சரணக்கமலஞ் சிரஞ்சேர்ப்பானோ நம்பாலே [மி]

மூவடி மண்ணிரந்தளந்த சேவடியையுடையோன்
ஆவலா யடியாரைக்காக்கு மற்புதவன்புடையோன் [மி]

மஞ்சு நிறத்தேகனம்பால்மகிழ் மிகுந்தமோகன்
கெஞ்சிக்கொஞ்சிப்பொருந் துவேனே கிருட்டிணன் வாய் போகம் [மி]

தீர்த்தம் ஆடவாவென்றென்னைச் செப்பாதேடி போடி
கோ த்தகையராயிருப்போமே குறைதீரேடி [மி]

பேயாட்டம் அல்லவோ யிந்தப் பிரபஞ்சத்தின் வாழ்வு
சேயாட்டம் ஆடியேயென்னைத் திருத்தினாலென்ன தாழ்வு [மி]

கொண்டைமுடித்துக்கொள்ளென நீ கூறலாமோடி யிங்கே
அண்டையிலிருந்தே விளையாடும் அரி தானெங்கே [மி]

மஞ்சளைப்பூசிக்கொளெனும் வார்த்தை நடவாது
பஞ்சணைக்கொப்பா யென்மேலே பள்ளகொள்வான் சாது [மி]

போய்த்தேட என்னால்முடியுமோ புகலாயிங்கே
வாய்த்தது தெய்வமென மகிழ்ந்தோமே வாழ்வெங்கே [மி]

மலர் மையிருக்குதென நீவழுத்துதல் வார்த்தையோ
அலர்மேலயனைப்படைத்த அய்யனை த்தேடாயோ [மி]

அலங்காரம் பண்ணிக்கொ ளென்றலற்றாதே நீயோடு
பலவந்தமாய்வந்தணைந்த பாலனெங்கேதேடு [மி]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube