| |
|
மாவருள்முகுந்தா நின்
|
|
நாதநாமக்ரிய இராகம் ஆதி தாளம்
கீழே *இந்த அடையாள முள்ளவையெல்லாம்
இரண்டுமுறை பாடவேண்டும்
பல்லவி
மாவருள்முகுந்தா நின் மலரடி நம்பிய
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
அநுபல்லவி
* கோவர் தனந்தனா லாபத்துதீர்த்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்
சரணங்கள்
வஞ்சம் செய்யாதேயெனக் கெஞ்சிப்புகழ்ந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* குஞ்சரந்தனைக்காத்த கோவலனே உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம்
வாத்சல்யமாய்ச் சதா வாழ்த்திப்புகழ்ந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* கூற்றுவன் தனைச்செற்றோன் கொண்டாடும் உன் தனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம் மாவருள்
மாறாவின்பந் தர வாறாயென்றோதிடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* கூராழியுஞ் சங்குமேந்தி ரக்ஷிக்குமுனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் நாம் மாவருள்
மதிதயிரெல்லாம் மத்திட்டுக்கடைந்திடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* குதூகலிப்பாயிடபம் கொண்டுகறந்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் மாவருள்
மருவார் புஷ்பங்களினால் மலர்பாதம் போற்றிடு
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* குருவாய் அயனாதியோரைக் கொடுத்த உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் மாவருள்
மானங்குலையச்செய்தும் மனத்திற்கொண்டாடிய
மாதரைக் கைவிடலாமோ ஆயர் மாதரைக்
* கோ நடனகோபால நாதா உனைக்
கூடாமல்நாம் கெடலாமோ உனைக்கூடாமல் மாவருள்
|
|