| |
|
மறந்திடுவானோ தோழி
|
|
அடானா ராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
மறந்திடுவானோ தோழி மனம்வைத்தெம்மை நாடி
கறந்திருக்கும் பாலும் வெண்ணெய் கையொடுகொடு போடி [ம]
கட்டித்தயிரும் கதலிக்கனியும் கொடுபோடி
சட்டி நிறையக்கற்கண்டு சர்க்கரையும் கொடுபோடி [ம]
பசியுடனே யெவ்விடம் கோபாலனிருக்கிறானோ
புசிப்பானன்புடனே கொடுபோ போதுபோகுதேனோ [ம]
உண்டபின்னரே யுரைப்பா யுள்ளபடி மாதே
தெண்டமிட்டோமென்று செப்பாய் தீ வினையீதேதே [ம]
பாதமலரல்லால் துணை பாவாய் நமக்குண்டோ
நா தனவனே நமக்கு நாயகன் வேறுண்டோ [ம]
இன்னமென்னசெய்தாலு நாமிணையடி விடுவோமோ
முன்னநம்பால் மொழிந்ததைக்கேளாய் துன்பப்படுவோமோ [ம]
நானே காரணனென நம்புகங்களென் றுரைத்தான் ஓ
ஏனை த்தினம்போக்காதீ ரென்றே யாசைவிரித்தான் [ம]
என்னைவிட்டால் சுகமில்லையென்றான் முன்னேபோய் நில்லாய்
சொன்னமொழியின்படியே துணைசெய்யெனச் சொல்லாய் [ம]
சரதம்ணொன்னானென நாம் தாழ்ந்துண்மை வைத்தாளானோம்
சுருதிவாக்கென்றானே இந்த சூதறியாமற் போனோம் [ம]
அறிந்தவனாயிருந்துமிந்த வநீ திசெயலாமோ இங்ஙன்
பிரிந்தழுதல்லலடையப் பிரமன் செயலாமோ [ம]
|
|