| |
|
மங்கையர்காள் நீவீர்வாரீர்
|
|
ஆனந்தபைரவி இராகம் அட தாளம்
பல்லவி
மங்கையர்காள் நீவீர்வாரீர் எங்கள்
மதனகோபாலனைச் சேரீர்
அநுபல்லவி
கொங்கைகள் அவன் செங்கையாலே பற்றிக்
கொடுப்பான் ஆனந்தம் மெய்யாலே
சரணங்கள்
இனிநமக்கொருக்காலும் துன்பம் ஈயான்
எவ்வுலகமும் காக்குமன்பன்
தனிபுகழ்பொருந்திய செம்பொன் மலர்த் தாள்
பிடித்தால்சேருவான் மிக்கவின்பன்
பெருமாயனென்னும் நாமமுள்ளோன் எங்கள்
பேரிலாசைமிக வுள்ளோன்
நேயநற்கருணைமாவாரி மார்போடே
நித்தமணைகுவான் கோரி
புன்னகைகொண்டிட்டான் கண்ணன் நம்பால்
பூரணமாய்வைத்தா னெண்ணம்
என்னகுறைவு நமக்கினியே ஈந்தான்
ஈந்தானின்ப வதரக்கனியே
ஈடிலின்பானந்தம் பெற்றோம் நம்மைப்
பீடிக்கும்துன்பத்தை யற்றோம்
கேடில் நடனகோபாலன் பூரண
கிருபைதந்த வாதிமூலன்
மங்கையர்காள் நீவீர் வாரீர் எங்கள்
மதனகோபாலனைச் சேரீர்
|
|