மங்களம் மங்களம் மங்களம்* மாதவனுக்கு

   

பரசு இராகம்
ஆதி தாளம்

மங்களம் மங்களம் மங்களம்* மங்களம் மங்களம் மங்களம்*
மங்களம் மங்களம் மங்களம்* மாதவனுக்கு ஸ்ரீ மாதவனுக்கு [ம]

மங்களம் ஸ்ரீநாதனுக்குக் கங்கையீன்ற பாதனுக்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய   [ம]

மங்களம் முகுந்தனுக்கு எங்கள் ஸ்ரீவைகுந்தனுக்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய   [ம]

மங்களம் ஆயர்மைந்தனாய் எங்களை புணர்ந்தவர்க்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய   [ம]

மங்களம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்கை ஆண்டாள் பெண்மணிக்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய   [ம]

மங்களம் வடபத்ராரியர் மலரடி ஆஸ்ரயித்தவர்க்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய   [ம]

மங்களம் ஸ்ரீ நடனகோபால மணவாளனுக்கு
மங்களம் ராஜகோபால மாயவனுக்கு நித்ய  [ம]

ராஜகோபால* ஜெயமங்களம் ராஜகோபால* சுபமங்களம்
ராஜகோபால மாயவனுக்கு நித்ய மங்களம்   [ம]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube