| |
|
மழையைக்கண்டபயிரதுபோல்
|
|
மோகன ராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
மழையைக்கண்டபயிரதுபோல் மகிழ்ந்துவளர்ந்தாட
எளியவர்க்கிரங்கும்பெருமாள் எங்களுடன் கூட (கண்ணன்)
ஆசனம்சமர்ப்பித்தடிதொழு தம்பதங்கள்விளக்க
ஸ்ரீநிவாசன் நம்முகம்நோக்கிச் சிந்தைநோய்விலக்க [ம]
உபசாரஞ்செய்தவன் சேவடியுதகம்பருக
அபசாரம்பொறுத்தரு ளென்றாடியகமுருக [ம]
தங்காவாசனத்தின்மே லெளப்பண்ணிப்பனி நீரால்
இங்கெல்லோரும் திருமஞ்சனம்செய் திட விரைந்தென்பால் [ம]
முன்தானைக்கொண்டே துடைத்து முகுந்தாவெனப்பாடி
வந்தனங்கள்செயஹரிமன மகிழ எம்மை நாடி [ம]
ஆலவட்டக்கயிங்கரியம் அனைத்தலங்காரங்கள்கோ
பாலனுக்குச்செய்தே பாவம்போக்கிட நாங்கள் [ம]
எங்கள்குலதெய்வமேயெம் முயிரேயெனக்கொண்டாடி
மங்களார்த்தியெடுத்து மங்கையர்வாழவிங்கேநாடி [ம]
ஊசலில்எழநாமு சலின்வடந்தொட்டாட்டி
ஈசனேநவநீ தமுண்ணென் றியம்பிடப்பரமேட்டி [ம]
நவநீ தம்பால்கனிசீனி நற்கருப்பஞ்சாறுந் தந்து
புவனமுண்டவாயினைப் போற்றிட நம்பால் உகந்து [ம]
துளவநன் மாலைசமர்பித்துத் தூயமலர்சேர்த்து
புளகாங்கிதராய் நாமெல்லாம் புல்கிடப்புண்ணியன் பார்த்து [ம]
பரிமளசந்தனக்காப் பப்பிப்பல்லாண்டு பாடி
அருமைதீரவடைக்காய முதளித்திட நம்மைநாடி [ம]
திருவுளமகிழ்ந்துதிருவடி மலர்கள்கொடுக்க அவன்
திருக்கைகளாலே யணைத்துத் தீயதுக்கம்கெடுக்க [ம]
நாமுமவனும்ஒருமித்து யமுனையில்விளையாட கிருஷ்ணன்
ஆமிது சரியேயென்றவன் மகிழ்ந்துகூட [ம]
கோபியர்கள்செய்பாக்கியமே பாக்கியமெனக் கொண்டாட
நாபிக்கமலன் அருள்பெற்று நங்கையராட [ம]
வடபத்ராரியர் துதிசெய்வாமனா வெனப்பாட ஸ்ரீ
நடனகோபாலா நன்மைதந்தா யெனக்கும்மைபாட [ம]
கண்ணன்எப்போது வருவானடி கலந்துசுகம்பெறவே
நண்ணியவித் துன்பவினை நாசமதாயறவே [ம]
|
|