மாதே மாதவனைத் தேடு நாம்

   

பந்துவராளி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

மாதே மாதவனைத் தேடு நாம்

அநுபல்லவி

பாதகமென் செய்தோமோ
ஆதாரமிழந் திட்டோம்  [மா]

சரணங்கள்

அந்தரங்கலீலை பல
வந்தமாகச் செய்து சுகந்
தந்த கிருஷ்ண சுவாமியிப்போ
தெந்தவிடத் திலோகாணோம்   [மா]

பட்டப்பகலிலே கிருஷ்ணன்
கிட்டிவந் தெம்மிடத்திலே
இட்டங்க ளனுபவித்து
விட்டுவிட்டே கினானந்தோ   [மா]

கட்டிலின்மேல் நானிருக்கக்
கெட்டிக்காரன் எப்படியோ
திட்டிவாசல் வழிவந்து
கட்டியணைத் தேகினானே  [மா]

சங்கமோடுறக்கம் ஒளி
இங்கவன் பற்றிக்கொண் டெம்மை
சங்கடம் செய்கிறான் எங்கள்
கொங்கைகள் அழகுற   [மா]

என்னஜன்ம மெடுத்தோமோ
அன்னமேயீ தென்னபாவம்
சொன்னதெல்லாம் மறந்தானே
மன்னவன் கோபால கிருஷ்ணன்  [மா]

மக்கள்மனை வீடுபொருள்
திக்கலவென் றெண்ணிச்சங்கு
சக்கர பாணியினடி
நிற்கநிலையதாய்க் கொண்டோம்   [மா]

வடபத்ராரியர் போற்றும்
நடனகோபால கிருஷ்ணன்
இடத்தில்நற் சுகம்பெற்றாம்
தடத்தைப்பற்றியே வோடு   [மா]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube