| |
|
குற்றம் உரைப்பதினும் நற்றவம்
|
|
புன்னாகவராளி ராகு அட தாளம்
பல்லவி
குற்றம் உரைப்பதினும் நற்றவம் மேலாம்
செத்தாரைப்போலிரு நெஞ்சே
அநுபல்லவி
நற்றவம் எதுவென்றால் கர்த்தன் காகுத்தனடி
நித்தம் மறவாமல் நினைவோடிருப்பதுவே [கு]
சரணங்கள்
பழித்துக்கொண்டிருக்கினும் அழிவுவரும்
ஒளிந்திருந்தோது நெஞ்சே
குளிர்ந்த நாமாமிர்ம் வழிந்த நாவினராகி
தெளிந்தனுதினமுன்னும் திருமாலடியார்தம் [கு]
அந்தகனும் நினைத்தேடி வந்திடாதோட
இந்த வழியைக்கொள் நெஞ்சே
சந்ததமும் அரவிந்தலோசனன் பாலே
சிந்தை செலுத்தியே தீர்ந்தவடியார் தம் [கு]
பல்பிறப்பெடாதொழிய நல்வழி இது
சொல்வதை கேளாய் நெஞ்சே
கல்நங்கையாயிடச் செல்வக்கால் மலர்வைத்த
வில்மங்கை நாதனை விரும்புமடியார் தம் [கு]
குருவினைப்பாசம் அற அறிவாம் நெறி
உரைக்கின்றேன் கேளாய் நெஞ்சே
குருவாய் திருமந்திரம் மறவாமல் பிறர்கட்கும்
உரைப்பாரவர்களிட மூழ்வினையால் வரும் [கு]
கொணர்ந்த பாவ புண்ணியத்தை யனுபவியா
தொழியக்கூடாதென் நெஞ்சே
குணந்தரும் தேகத்தே யுணர்ந்துகில் நின்று
அனந்தன்மேல் சயனனை அனுபவிப்பார்கள் தம் [கு]
அடவிமான்போல் மயங்கிக் கிடக்காமல்
கடைத்தேறுவாய் கேள் நெஞ்சே
விடங்கக்கப் படத்தின்மேல் நடித்த நண்பனைக் காட்டும்
வடபத்ராரியர் திருவடிவாழ்த்தி வாழ்வார் தம் [கு]
|
|