| |
|
கூடாய் கிருஷ்ணா ஓ எங்களை நீ
|
|
உசேனி இராகம் ஆதி தாளம்
பல்லவி
கூடாய் கிருஷ்ணா ஓ எங்களை நீ
கூடாய் கிருஷ்ணா
அநுபல்லவி
* கூடாய் எங்கள் அல்லல் ஓடிடும் புகழ்கை
கூடும் கூடும் கூடும் கூடும் நாடிக்கூடாய் கிருஷ்ணா ஓ எங்
சரணங்கள்
.* கொண்டை உடையோனே
கோதண்டம் உடையோனே *
* எண்டிசைபோற்றிடும் புண்டரீகத்தாளா
எங்கள் சங்கடங்கள் பங்கம் உறவே நீ [கூ]
* பட்சிவாகனனே ஓ உச்சிதவழகனே * ராசபட்சி *
* இச்சித்தோம்உன்தனை நிச்சயமாக
இன்பச்செம்பொற்பாத அன்பா துன்பமறக் [கூ]
* சேலைகவர்ந்தோனே வேதநுலைப் பகர்ந்தோனே *எங்கள்*
* சாலம் செய்யாமலே பாலனே இன்பமார்
தத்துவமாய்ச் சித்தம் வைத்தினி நித்தமும் [கூ]
* நடனகோபாலா இனி அடமேன்சுசீலா * ஸ்ரீ *
* மடவியர்மிக்க இடஞ்சலையுற்றோம்
மாசிலாத்தேசுற நேசநற் பாசமாய்க் [கூ]
|
|