கோக்களைமேய்க்கும்

   

காம்போதி ராகம்
ரூபக தாளம்

கன்னிகள்

கோக்களைமேய்க்கும் போதெல்லாம் குடைகொண்டு பிடிப்போமே
ஆக்களைமேய்க்கும் போதழகாய் வெண்ணெய்யளிப்போமே   [கோ]

திருமேனிவாழவொட்டாமல் செய்வோதே கைங்கரியம்
திருவடிநோகச்சென்றானே செய்வதெங்கு கைங்கர்யம்   [கோ]

திருவுளமுவப்பச் சீனித்தேம்பால் சமர்ப்பித்தோமே
திருவுளத்துக்கென்னமோ நாம்தீங்கு செயப்பெற்றோமே   [கோ]

இடிவிழாதோ என்சிரமேல் ஏனோஇருக்கின்றேன்
படிக்குச்சுமை அல்லவோ நான் பாவியேனிருக்கின்றேன்   [கோ]

என்னசுகம் இவ்வுடலுடனேயிருந்திங்கே
என்னிருகண் ஆற்றிலே விளையாடுகிறானிங்கே   [கோ]

கண்ணீர் வருவதெல்லாம் கண்ணனுக்களிபோடி
எண்ணிப் பாடியாடுவோமடி எழுந்திருப்பாய் நாடி   [கோ]

பாடியாடும் அன்பர்வினை பறக்கடிப்பவன் தோழி
தேடிப்பிடித்துத் திருவடிகொடுப்பவன் தோழி   [கோ]

திருப்பவளமேபவளம் ஜெகத்திலிணையுண்டோ
திருவாயமுதம் சீனித்தேன் நல்ல கற்கண்டோ   [கோ]

அமுதவாயின் தேன்பருகாது அல்லல் போமோடி
எமனிவனே யெரிக்கிறானீதென்ன காலமோடி   [கோ]

பக்தவத்சலனெனும் பேர்பலித்த தெவ்விதமோ
முத்தர்பலன்பெற்றது முகுந்தன்பா லிவ்விதமோ   [கோ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube