கோபமேனின்னமுன்

   

தர்பார் இராகம்
ஆதி தாளம்

பல்லவி

கோபமேனின்னமுன் சீர்பாத கமலங்கள்
கொடுத் தருளுவாயையா   [கோ]

அநுபல்லவி

நீ பாலன்போல்வந்து லீலைகளைப்புரிந்த
நினைவுகனவாச்சோ ஸ்ரீகிருஷ்ணா  [கோ]

சரணங்கள்

நன்று ஞானானந்த நாரணன்யாமென
நவின்றெங்களைச் சேர்ந்து
பொன் றுமிவ் வாழ்க்கையைப் புந்திதனைவிட்டுப்
போய்விடச் செய்தவனே ஸ்ரீகிருஷ்ணா   [கோ]

சகலதேவர்களுக்கும் தலைமை நாமென்றெம்மைத்
தழுவுவீரெனத் தழுவி
அகலியைபோ ற்சுக மடையச்செய்தெங்கள்
மனவல்லல் அழித்தவனே ஸ்ரீகிருஷ்ணா  [கோ]

படரொழித்தாளெனத் திடமாய்த் துதிப்பவர்
பக்கத்தில் நின்றாடும்
நடனகோபால நா தா நம்புமெங்களை
நட்டாற்றில் விடலாமோ ஸ்ரீகிருஷ்ணா  [கோ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube