கருணாஜலதியின் கழற்கமலங்களைக்

   

முகாரி ராகம்
அட தாளம்

கண்ணிகள்

கருணாஜலதியின் கழற்கமலங்களைக்
காணாதகண்கள் கண்ணாமோ   தோழி
தருணமிதல்லவோ தயாபரனைச்சேர
தாமோதரனீ தெண்ணலாமோ

பா தங்களிலேவீழ்ந்து பணிந்திடாத சென்னி
பாவமிருகங்கள்வாழ் கிரியே   ப்ராண
நா தனை நாம்கண்டேதம் பொறுத்தாளென
நவிலச்சகி தயைபுரியே

சொற்படிநடந்து சுவாமியின் முகோல்லாசம்
செய்திடாத நெடுங்கால்கள்   அந்தோ
கற்பொறியாக்கும் மயானத்திலே நட்டுக்
காணும் துக்கப்பந்தற் கால்கள்

உலகுண்ட பெருவாயனைப் பாடிடாதவாய்
உயிரைமாய்த்திடும் சர்ப்பபிலமே   தோழி
அலர்மேல்மங்கை நா தனை யணைக்கச்செய்திடு
வாயுனக்கிது நலமே

கைங்கர்யம் கண்ணனுக்குச் செய்யாத
கைகள் குறளினுடைக் கையே  நாளுங்
கைங்கரிநஞ் செய்திடவல்லோ கண்ணன்
நமக்குக்கைகளைத் தந்தான் மெய்யே

திருப்பா தமலர்களில் சேர்ந்த திருத்துழாய்
வாசனை தெரியாத   நாசி
எமக்கிருப்பானேன் மலையிருட்குகையல்லவோ
இத்தால் என்னப் பிரயோஜனம் சீ சீ

காதலுடன் கண்ணன் போதனைநெயும்
கருணை வசனங்கேளாச் செவிகள்  ஐம்
பா தகஸ்ரேஷ்டர்கள் வாசம்செயும் பொல்லாப்
பாழ்வீட்டின் சாளரக் கெவிகள்

பாலனைச்சேராத தேகம் பிணம்விழுந்து
பலர்கூடிடும் வீடு   அந்தோ
காலமோவென்செய்வோந் தேடிக்கண்டுபிடித்
தாலுனக்கிங்கேயார் ஈடு

மனவிந்திரியம் நின்றுவன ஆரன் தாட்களை
தினமுந்தியானிப்பதே மார்க்கம்   எங்கள்
மனமலைந்திடச் செய்தானே ஸ்ரீமாதவன்
வனிதாயீதென்ன சன்மார்கம்

சன்மார்க்கத் தெய்வத்தையே நம்பினோ
மெங்களைச் சங்கடஞ் செயவிங்கே  தோழி
துன்மார்க்கக் காலம்வந்ததே நம்மைவிட்டுத்
தொலைவதிஃதினி யெங்கே

எங்கேபோ யென்செய்வ தென்னமாய்ப் பிழைப்ப
தென்னகாலம்வந்த தெமக்கு   முன்னம்
மங்கையோடாடும் சிவனாதியர் போற்றும்
மாலைக்கொணரும் பாரம் உனக்கு

வடபத்ரஸாயி ஆசாரியர் திருமல
ரடியைவணங்கினோம் தோழி   ஸ்ரீ
நடனகோபாலன் செய்தானிந்த நன்மை
அதுவும் நம்பாக்கியம் வாழி


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube