| |
|
கருணையென்னும் குணம்
|
|
நாட்டை ராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
கருணையென்னும் குணம் உன்னிடம் காணோமேடி தோழி
தருணத்துக்குதவிசெய்யாதார் தரணிக்குச்சுமை தோழி [க]
சுமையென்னும் ஆக்கைத்தொலைந்தாலும் சுகமேடி தோழி
அமைத்துவிட்டானே அவன் என்செய்வோமையோ தோழி [க]
ஆழமதில் விழுந்தழிந்தால் ஆருக்குக்குறை தோழி
வாழவல்லோ நினைத்திருந்தோம் வாமனன்பால் தோழி [க]
வஞ்சகம் செய்யேனெனத் திருவாய் மலர்ந்தான் தோழி
செஞ்சரணப்பஞ்சரம்கிளி சேருமோடி தோழி [க]
மறக்கமாட்டானே யீதென்ன மாயமோடி தோழி
கறக்கவருவானே நம்மேல் காதல்கொண்டு தோழி [க]
அகலியைசாபம் தொலைத்த அடியுடையோன் தோழி
பகவானேயென்ற த்ரௌபதியைப் பாலித்தோன் தோழி [க]
பெண்ணுக்குப் பேயுமிரங்குமென்பது பிசகோ தோழி
கண்ணுக்குக்கண்ணாயிருந்தானே காணோமே தோழி [க]
எந்நேரமும்நம்பா லிருந்தின்பமீந்தான் தோழி
சொன்னானேகை விடுகிலோமெனச் சோதித்தானே தோழி [க]
முத்தமிடவருவானோ மோகித்தென்பால் தோழி
சத்தா தியைம்புலன்களுக்குச் சாதகமென் தோழி [க]
சென்மமெடுத்ததற்கென் சிங்காரமேடி தோழி
நன்மைகொடுப்பவன் தின்மை நமக்குத்தந்தான் தோழி [க]
|
|