கரையேற்றுவதாரிங்கே

   

செஞ்சுருட்டி ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

கரையேற்றுவதாரிங்கே நீ கைகொடுத்தாயன்னே
உரை கேளானோ அரவணை யோனுக்குப் பலனென்னே [க]

எடுத்துவைத்துக்கொடுப்பேனடி அடுக்குமுறி வெண்ணெய்
கெடுத்துவிட்டுப்போகலாமோ கேசவன் தானென்னை  [க]

துரைராஜகோபாலன்மேல் தோஷம் சொலலாகா
நிரைபு கலப்போக வென்பாவம் நிலமேலாகா   [க]

கதிரவன்முன்பாயிருளைக் காணலாமோ தோழி
அதிமோ கநம்செய்தான் திருவுளமறியேன் வாழி  [க]

அறிந் தவனாயிருந்தும் என்னை பிரிந்திடல் நீதமோ
செறிந்தரியை அணைத்துக்கொண்டு சென்றவற்போதமோ   [க]

போதனைக்குள்ளாயிவனும் போகலாமோ கேளே
பாதகத்தியாரோயிங்கே பழிகொள வந்தாளே   [க]

தீ தளிக்கும் பா தகச்சொல் செப்பினேனே தோழி
யா தவனெல்லாருக்குமே ஆதரிப்பவன் வாயி    [க]

இல்லங்கள்தோறு மிருந்தின்பம் தரவிலையோ நம்ம
செல்வச்சுவாமி அதுபோல செய்திடமலையோ   [க]

என்னைப்போல் இச்சைகொள்வார் எத்தனை நங்கை மாரோ
அன்னமான ஆண்மகனைவிட்டால் நமக்காரோ  [க]

தெரிவையர்க்கரியைவிடப் புருஷனும் வேறுண்டோ
நெறி அறிவாரோ அந்நியரைப் புருஷனெனக்கொண்டோர்   [க]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube