கண்ணனைக்காணாத

   

சாரங்கா இராகம்
ஆதி தாளம்

கண்ணிகள்

கண்ணனைக்காணாத வென்றன் கண்களிருந்தென்னே
எண்ணமெல்லாம் உன்றன்மீ திலென்று சொன்னான் முன்னே   [க]

காலைப்பிடித்தே வருடாக் கைகளிருந்தென்னே
வேலைக்கடைந்தவிழ்தம் விண்ணோர்க் கீய்ந்தோனெனச் சொன்னோன்[க]

கலைக்கச்சுநெகிழ்பானேடி கார்வரையெடுத்தகையால்
தலைவிதியோ அலைந்தலுத்தோம் தாரணியில்மெய்யால்   [க]

கட்டப்பட விட்டுவிட்டானே காசினியின்மீது
இட்டதெய்வமாயிருந்தானே வீதென்ன சூது   [க]

ஏனோவெம்மைப் பிரிந்தானையோ இதற்கென்ன நாம் செய்வோம்
ஸ்ரீஜானகிராமகிருஷ்ணனைச் சார்ந்தாலல்லோ வுய்வோம்   [க]

வாயமுதத்துக்குநிகர் வானமிர் தமாமோ அவன்
வாயதனால்பொய்மை சொன்னால் வலியபா வம்போமோ  [க]

சேவடிவைத்தே சென்ற சிங்காரத்தடமேகாய்
பாவனமாய்ப்போமோ ஜென்மம் ஆவல்தீரும்தோகாய்   [க]

மீனுருவான திருவேங்கடேசனைப் பாராய்
கானகத்தில் மானைபெய்த காகுத்தனைப் பாராய்   [க]

கறவைகளைமேய்த்துக் கறக்குங் கண்ணனைப் பாராய்
துறவர் குலம்தொழுது பணிதூயவனைப் பாராய்   [க]

வெண்ணெய் தயிர்பால் திருடும் வித்தகனைப் பாராய்
கண்ணைவிட்டு நீங்கவிலை யென்கந்தனை நீபாராய்   [க]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube