| |
|
கண்ணன் கைதலம்பார் கனாகண்ட நாச்சியார்
|
|
நாதநாமக்ரியா ராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
கண்ணன் கைதலம்பார் கனாகண்ட நாச்சியார்
கருணைக் காவ தெப்போது
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு
போய் சேருவ தெப்போது
ஆயர்மகன்மேல் ஆசைகொண்டாளடிக்
கன்புசெய்வது நா மெப்போது
வேயர் புகழ் வில்லிபத்தூருக்கேக நாம்
விருப்பம் வைத்திடுவ தெப்போது
அச்சுதன் அனந்தன்மேல் ஆசைவைத்தாள்மல
ரடி சிரமணிவ தெப்போது
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நா மெப்போது
துளசி வனந்தனில் உலகமகிழாண்டாளுக்கு
தொண்டு செய்திடுவ தெப்போது
குளமூன்று மொன்றாய் வில்லிபுத்தூருக்கேக
உளமிழ்ந்திடுவ தெப்போது
அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திதிடுவ தெப்போது
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கேக நாம்
ஆசை வைத்திடுவ தெப்போது
திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள்சே
வடிக்கீழ் புகுவ தெப்போது
திருப்பாவையருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வதினி நா மெப்போது
குயிலைக் கூவாய் என்னும் குயில்மொழியா ளடிக்
கீழ் குடியாவ தெப்போது
குயிலினங்களார் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வ தெப்போது
பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவ தெப்போது
கண்குளிரப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டுகளிப்ப தெப்போது
இண்டர் நடைகுணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவ தெப்போது
அண்டர் முனிவர்கள் தொண்டரேத்தும் புத்தூர்
கண்டு களிப்ப தெப்போது
திருவரங்கேசனை மருவிவாழ் ஆண்டாள் தன்
திருவடியடைவ தெப்போது
இருநிலம் புகழ் புத்தூருக்கே போவேனென்
றியம்பி நடப்ப தெப்போது
நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
வடிநாடி வாழ்வ தெப்போது
வடபத்ரஸாயியருளும் வில்லிபத்தூர்
மருவி வாழ்ந்திடுவ தெப்போது
|
|