கைபிடித்தவன்கதற விடலாமோடி தோழி

   

ஆனந்தபைரவி ராகம்
ஆதி தாளம்

கண்ணிகள்

கைபிடித்தவன்கதற விடலாமோடி தோழி
மெய்யறிந்தவன் அயல் மேவலாமோடி தோழி (கண்ணன்)

இல்லைவேறு கதியில்லை நமக்கில்லை இல்லை தோழி
தொல்லைப்பொருளைச்சேராவிடில் போமோ தொல்லை தோழி   [கை]

உறியில் தயிர்வெண்ணெய்வைக்க வொட்டானடி தோழி
பறைதலிலாக் கிருபையுடைப் பாலனேடி தோழி   [கை]

நவநீ தசோரன் ஆயர் நங்கையர்கள் மாரன்
புவனம்உண்ட தீரனசோதை புகழ்சுகுமாரன்   [கை]

பத்தினிகளித்தனைபேர் இன்னம் எத்தனைபேரோ
அத்தியையாதரித்த அய்யனுக்கினி நாம்யாரோ   [கை]

ஆசைக்குத் தகுந்தநல்ல அன்பனேடி தோழி
எசோதை தவத்தால்வந்த இன்பனேடி தோழி   [கை]

வலர்மார்பினில் திருமகளை வைத்திடு காளமேகன்
பலவிதமாய் நடித்தென்னிதழ் பருகியநம் மோகன்   [கை]

முன்றானையின் மேலிருந் தானந்தங்கொள் முகுந்தன்
இன்றாய்பாடியுய்த்திட இயற்றுமோகன வைகுந்தன்   [கை]

ஆயிரம் கண்ணன் துதிக்கும் ஆண்டவனேடி தோழி
போயிரவா முன்போதுழாய் பூண்டவனேடி தோழி   [கை]

சோதனையே நாமறிந்தோம் தூயனேடி தோழி
மாதவனையே நம்பினாம் மற்றில்லை சங்காழி   [கை]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube