| |
|
காவேணுலோலா கோபாலா
|
|
கரகரப்பிரியை இராகம் ஆதி தாளம்
பல்லவி
காவேணுலோலா கோபாலா எம்மைக்காவே
அநுபல்லவி
காவேறே திக்குண்டோசொல் காவேறே திக்குண்டோசொல்
காவேணுலோலா கோபாலா எம்மைக்காவே [கா]
சரணங்கள்
முன்னே எம்மிடத்தில் என்னென்ன சொன்னாயிப்போ
மோசஞ் செய்யாதே ஓ கோபாலா [கா]
எந்நேரமும் மருவார் பன்னா சனங்கொள்பதத்தை
எண்ணினோம் புண்ணிய ஓ கோபாலா [கா]
கண்ணாணையுங்களை நான் எண்ணாமற்போகேனென்ற
கத்தன் நீ யல்லவோ கோபாலா [கா]
விண்ணோர்க்குமரிதான கண்ணாவுன் திருமேனி
மேவப்பெற்றோமே கோபாலா [கா]
மோகலாகிரி சுகபோக வாசையால் நொந்தோம்
முத்தந்தந்திடவா கோபாலா [கா]
தாகமுடனே ஹரி ஏகபோக நல்லின்பம்
தந்தெங்களையாள் ஓ கோபாலா [கா]
போகநல்லின்பம் தாவென் றேகமனமாய் வந்தோம்
போராடாதேவா கோபாலா [கா]
சோகவேதனையினி யேகாவிடில் நம் தூலம்
சோர்வுற்றிடுமே ஓ கோபாலா [கா]
ஆதரிப்பாய் ஓஹரி வேதங்கொடுத்த உனை
அடுத்தோம் விடாதே ஓ கோபாலா [கா]
நா தா உனதுதிருப் பாதமலரே திக்கு
நடனகோபாலா மாலோலா [கா]
|
|