| |
|
ஜீவாத்மகோடிகளெல்லாம்
|
|
எதுகுலக காம்போதி இராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
ஜீவாத்மகோடிகளெல்லாம் ஸ்திரிப்பிராயமென் றறிவாய்
தேவர்களைப்படைத்த அயன் ஜெனனவிடந்தெரிவாய் [ஜீ]
பரிமளத்ரவ்யம்கொள் ளெனப்படாதேடி நங்காய்
பரிமளத்திருமேனியைப் பாராயடியிங்கார் [ஜீ]
அன்னம் அலர் அப்படைக்கா யாதியெல்லாம் அவனே
என்னளவோ அன்புசெயும் யார்க்குமீ தருள்பவனே [ஜீ]
கொங்கை செங்கைகள் அலங்காரம் குறைந்துபோச்சே
மங்களுக்கிருப்பிடமான மாயனாச்சே [ஜீ]
மூச்செறியலாச்சுதேடி முகுந்தனை நினைத்து
காட்சிகொடுக்க வருவானோ கண்ணன் நினைத்து [ஜீ]
பிழைக்க வருவானோ வெம்பெருமானெனன்பாலோடி
வளைத்துவிடாதெனை மயக்கி வஞ்சம் செய்தானேடி [ஜீ]
உபயபிரஷ்டமானால் உலகோர்கள் நகைப்பாரே
அபயஸ்தம் கொடுக்கவருவானோ அடியார்க்காரே [ஜீ]
நோக்கங்களால் அகப்படுத்தும் நுண்ணறிவுடையோன்
காக்கவருவானோ கன்றுமேய்த்திடும் கோலுடையோன் [ஜீ]
உச்சிக்கொண்டையுடையோன் ஒய்யாரநடையுடையோன்
பட்சிவாகனமுடையோன் பாற்கடலுடையோன் [ஜீ]
அலங்கார நயனன் அடியாள்ஸ்தனமேல் சயனன்
அலரதனால் அகிலங்களாக்கும் அநந்தசயனன் [ஜீ]
|
|