| |
|
ஐயோ உன் ஆசையினால்
|
|
எதுகுலகாம்போதி ராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
ஐயோ உன் ஆசையினால் தையலர்களிங்கிவ்விதம்
அநுபவித்தோமே இனிமேல் ஹரியுன் சித்தமே
கணமோர் கற்பமதாக மனமதிற் கொண்டுமிக்க
கஷ்டமுற்றோமே இனியுன் இஷ்டமத்தனே
தாயைக்காணாப்பிள்ளைகள்போல மாயனேயுனைக்காணாமல்
தத்தளித்தோமையினியுன் சித்தமத்தனே
பந்துவின்ப மாதியெல்லா மிந்தவுலகில் நீயேயென்று
பற்றுவைத்தோரேயினியுன் சித்தமத்தனே
பிரமனாதி தேவர்களுக்கு வரமதுகொடுத்து நற்புகழ்
பெற்றகத்தனேயினியுன் சித்தமத்தனே
மங்களசீ தைலங்கையிலே வருந்தவே ரட்சிக்கமனம்
வைத்தகத்தேயினியுன் சித்தமத்தனே
ஒன்றாராலே நின்றாளினையுன்னு திரௌபதியைக்
காத்தொப்புவித்த கத்தனேயினியுன் சித்தமத்தனே
நித்திய உன் திருப்பாதத்தில் புத்திவைத்தோர்களைக் காக்கும்
நித்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
ஓ வெனைக்கா மூலமென்று வாயால் கூவுங்கரியீடேற
உற்றகத்தனேயினியுன் சித்தமத்தனே
பொங்கமுதம் ராமஞ்சாத்தி யெங்கள் வீடுகளில் வெண்ணெய்
புசித்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
பாலிகைகள் போலவந்து சேலையையவிழ்த்துச் சேர்ந்த
பர்த்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
மங்கையரேயுங்களை நான் விட்டு நீங்கிலேனென்றன்று
வசித்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
பாவையர்க ளாவிக்குள்ளே ஆவியாய் நின்றின்பமனு
பவித்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
விண்ணவரை நண்ணு துன்ப வினையறுத்திடவுற்ப
வித்தகத்தனேயினியுன் சித்தமத்தனே
நடனகோபாலனென்றுனைத் திடமதாய் நம்பினோமந்தோ
நாடுகத்தனேயினியுன் பாடு சித்தமத்தனே
ஐயோவுன் ஆசையினால் தையலர்களிங்கிவ்விதம்
அநுபவித்தோமேயினிமேல் அரியுன் சித்தமே
|
|