இல்லை வேறு தெய்வம் ஹரியைவிட

மோஹன இராகம்
அட தாளம்

பல்லவி

இல்லை வேறு தெய்வம் ஹரியைவிட
இல்லை வேறு தெய்வம்   [இ]

அநுபல்லவி

தில்லையில் ஆடும் அரன்சொல்லி வணங்குவதால்
சங்கரன் செங்கை சாபப் பங்கஞ் செய்தவன் அன்றி   [இ]

சரணங்கள்

ஹரிதாள் கங்கையை அரன் ஸிரமேல் தரித்தமையால்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

சங்கரன் தரும் வரம் பங்கப்படுவதால்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

ராமமந்திரத்து உண்மை பாமரர் அறிவாரோ
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

சிவன் ஸதா மந்திரம் தவம் புரிவதால்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

ப்ரணவ மந்திரம் எவன் பேரில் அகிலமதில்
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

வடபத்ராரியர் தொழும் நடன ஹரியைவிட
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை வேறு தெய்வம்[இ]

Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube