| |
|
* என்ன சொல்லியும் எள்ளளவேனும்
|
|
சோகவராளி இராகம் ஆதி தாளம்
கீழே * இந்த அடையாளமுள்ளவையெல்லாம்
இரண்டுமுறை பாட வேண்டும்
கண்ணிகள்
* என்ன சொல்லியும் எள்ளளவேனும் நெஞ்சிரக்கம்
இல்லாதேகினதென்னோ கிருஷ்ணா எம்மேலிரக்கம்
இல்லாதேகினதென்னோ கிருஷ்ணா
* உன்னதமாகிய பன்னகசயனவோ
மன்னித்தருள்வாய் அரி கிருஷ்ணா ஏதம் மன்னித்
* கன்னலனைய எங்கள் மன்னவனே உன்தன்
காலைப்பிடிக்கின்றோங் காண் கிருஷ்ணா உன்தன் காலைப்
* இன்னமும் என்னசெய்வோம் பொன்னகர்வாசிகள்
ஏத்தித்துதிகள் செயும் கிருஷ்ணா நாளும் ஏத்தித்
* இரட்சிப்பவன் நீயென்று எச்சகத்துள்ளோர்களும்
இயம்புகின்றது பொய்யோ கிருஷ்ணா உன்னை (இ)
* வரவுபார்த்திரவினில் மரபே உன்தனைக்கூடி
வாழ்ந்த நங்கையரலவோ கிருஷ்ணா ஓ (வர)
* கர கமலங்களால் பரவசமாகவே
கட்டியணைத்திட்டாய் கிருஷ்ணா எம்மை (க)
* நரஹரியே உன்தன் சரணமரையுற்றோம்
நடனகோபாலாவோ கிருஷ்ணா எங்கள் (க)
|
|