எங்கே போனானோ கண்ணன்

   

செஞ்சுருட்டி ராகம்
ஆதி தாளம்

பல்லவி

எங்கே போனானோ கண்ணன்
என்ன செய்வோம் தோழி   [எங்கே]

அநுபல்லவி

உங்களை விட்டெங்கும் போகிலேன் நானென்று
எங்களிடத்திலன்பா யியம்பிய கோபாலன்   [எ]

சரணங்கள்

கணநேரமும் எம்மை விட்டுப்பிரியாத
மனமுடையோன் யாங்கள் மயங்கவிட்டேயின்று   [எ]

மங்கையர்கள் கர்ம சங்கடந்தீர்க்கும்
தங்கமேனியனான யெங்கள் ஸ்ரீ கோபாலன்   [எ]

காதலின்படி நம்பால் பேதமின் றிச்சேர்
மாதவகோபாலன் பாதமலர்கள் நோவ  [எ]

வெண்ணெய்தயிர்பால் உண்ணுவோனாகி நம்
எண்ணங்கவர்ந்த மணி வண்ணன் ஸ்ரீ கோபாலன்   [எ]

கொங்கைகள்மேல்பரி மளம்பொங்கப்பூசும்
நங்கையர்கள் சூழும் நடன ஸ்ரீ கோபாலன்   [எ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube