எங்களாலென்னசெயக் கூடுமடி

   

முகாரி ராகம்
ரூபக தாளம்

கண்ணிகள்

எங்களாலென்னசெயக் கூடுமடியிங்கிப்போது
மங்களமாகவிருந்த மா ல்வருவதெப்போது   (கண்ணன்)

எள்ளளவேனும்கிருபை எம்மேல்வைத்துப்பாராய்
கொள்ளைகொண்டவனிடம் போய்குணமாயிவைகூறாய் [எ]

பாலைக்குடியாமலே கன்றுகளும்பார்க்குதே
வேலைவண்ணனைச்சேவிக்கமேல் விழிகளும் நோக்குதே   [எ]

கன்றுகளுக்குமிரங்கானோ கல்நெஞ்சக்கண்ணன்
அன்றுமுதலின்றளவும் அவன்மேலே நம்எண்ணம்   [எ]

அம்மாவெனக்கூவுதடி அய்யோவிக்கன்றுகள்
எம்மாலேஎன்னமுடியும் என்செய்வோம் நீபோய்வின்  [எ]

பாடியெல்லாம்வாடிப் பரதவிக்கின் றதுபாராய்
ஓடிப்போய்கண்டுளமிரங்கும் படியுரைத்துவாராய்   [எ]

வரவைக்கண்டுமகிழ்வுகொண்டு வாமனன் கைபிடிக்க
நரஹரி ஸ்ரீநாரணசற் பாசுரங்கள் படிக்க   [எ]

பாடியகமுருகிப்பரந் தாமா வென்றழைக்க
நாடிநம்மைத்தழுவ வவன்கூடயெல்லீரும் தழைக்க   [எ]

நடயழகைக்கண்டுநா மெல்லோரும் நடனஞ்செய்ய
புடவையெடுத்தகையன் இப்பொல்லாவினைகொய்ய  [எ]

செந்தாமரைச்சேவடிகள் சேயிழையார்நோக்க
வந்தாயர்பெண்டுகள் விசனமதைப்போக்க  [எ]


Tamil font TABMaduram by Kamban software *** DHTML Menu / JavaScript Menu - by OpenCube