| |
|
தேவதேவருக்கும் தேவன்
|
|
தோடி இராகம் ஆதி தாளம்
கண்ணிகள்
தேவதேவருக்கும் தேவன் தீரதிவ்வியரூபன்
மூவுலகு முண்டுமிழ்ந்த முகுந்தன் நம்குல தீபன் [தே]
தீவினை நீக்கியாட்கொள்ளும் திருமாலேடிபோடி
கோவிந்த கோபாலகிருஷ்ண குஞ்சரமாலேடி [தே]
எண்ணிப்பாடியாடிடுவோர்க ளிடமேவாழும்
கண்ணனைக்காணுவதெந்நாள் கலந்திருந்தோம் நாளும் [தே]
திருவடிவருடும்சுக ஜீவனமும் போச்சே
கருணையுடனேயிருந்தான் காலமிப்படியாச்சே [தே]
கயிங்கரியம் செய்யாமல்நம் காலம் வீணாகுதே
ஐந்திந்திரியங்களும்வாடி யகம்வேகுதே [தே]
வேகுதே மாலாசையினால் வேகமதாய்ப்போடி
வாகுடனே மலர்பாதம் வாழ்த்தியழைத்துவாடி [தே]
அழைத்து வந்தாலேயொழிய யாக்கையினி நில்லா
அழைத்துவாடியன்பிலா வசடரிடம்புல்லா [தே]
>
அழைத்துவாடியாதரவா யையனம்மையணைக்க
அழைத்துவாடி யடிபணிந் தார்வமுடன் தோள்பிணைக்க [தே]
பிழைக்கவழிவேறில்லைப் பிராணேசனையல்லால்
அழைக்க அவன் வருவானேடி அட்டி ஒன்றும் சொல்லான் [தே]
சொல்லடியே சொன்னதெல்லாம் சுத்தமுடன் சொல்லாய்
கல்லடியே உந்தன்மனம் கண்ணன்முன்போய் நில்லாய் [தே]
|
|