| |
|
சிக்கிக்கொண்டான் வாரீர் எங்கள்
|
|
நாதநாமக்ரியா இராகம் ரூபக தாளம்
பல்லவி
சிக்கிக்கொண்டான் வாரீர் எங்கள்
ஸ்ரீ வேணுகோபாலன் [சி]
அநுபல்லவி
முக்கிமாய்த் தேடினதால்
மோசக்கருத்தைவிட் டெம்மிடத்தில் [சி]
சரணங்கள்
நாளோர்யுகமாகவல்லோ நாம் கழித்தோம் தோழி
ஆள்வதற்குக் கிடைத்ததினால் ஆனந்தித்து கொண்டாடுங்கடி[சி]
என்னதவ மியற்றினோமோ இவன்தனை நாமடைய
மன்னமன்ன மா தவனை மன்னுவதற் கிதுசமயம் [சி]
விட்டாலினி கிட்டுவானோ மேதினிதன்மீதே
பட்டாபிராமகிருஷ்ணனைக் கட்டிகக்கொண்டானந்தமுற [சி]
வெண்ணெயொடு பாற்கனியும் வேகமாகக் கொண்டுவாரீர்
கண்ணபிரான்பசியார வுண்ணவே நாம்கொடுப்போம் தோழி [சி]
ஆபரணங்களுக்கழகு அளிக்குமற்புத ரூபன்
பாபவிமோசனமாமிப்போ பதம்சிரமேல் படப்பணியும் [சி]
பவமதுநா மெடுத்ததற்குப் பலித்ததின்று லாபம்
தவவிதியா திதேவர்கள் கவனத்துக்குஞ் சிக்காதோன்[சி]
எச்சன்மத்தில் செய்கன்மமோ விங்ஙனம் பிரிந்திருந்தோம்
முச்சகமும் தொழுமாதி மூலனாகிய சீலனிவன் [சி]
உடலுயிரும் போலவினி யுடனிருந்து காப்பான்
நடனகோபால நாயகிமாருடன் புணரும் நாராயணன் [சி]
|
|