| |
|
அரனுமயனும் காணாத
|
|
கேதாரகௌள இராகம் ரூபக தாளம்
கண்ணிகள்
அரனுமயனும் காணாத திருவடியை யுடையோன்
கருடன் முதுகேறிவரும் கிருபைமிக் குடையோன் [அ]
பாலும் தண்ணீர்போலப் பரந்தாமனோடிருக்க அவன்
சீலத்திருவடிகளை யென்சென்னிமேல் தரிக்க [அ]
சென்னிக்குத் திருவாபரணம் சேவடியினை யலவோ
என்னிலிருந் தானந்தக் கூத்தாடு மிவனலவோ [அ]
வந்துநொந்துகிடக்கின்ற என்சிந்தைநோ யறுப்பானோ
நந்தகோபன் மருகியென நானும் பொறுப்பேனோ [அ]
கன்றுகள் பின்போக்கிடாமல் கட்டியணைப்பேனே
என்றுமிதுபோலிருப்போ மென்றெண்ணிப் பிழைப்பேனே [அ]
ஆதரியாமலிருப்ப தழகலவே தோழி
பாதாரவிந்தமேகதி பரிபூரணன் வாழி [அ]
ஈசனேடியாரேடி யிப்படிச்செய்யலாமோ
நாசனேடி அரக்கருக்கு நம்மைப்பிரியலாமோ [அ]
பிரிவதற்கான பிழை நாம் என்செய்தோம் கூறு
எரியுதே சர்வாங்கமு மிங்கென்செய்வோம் தேறு [அ]
திருவடிப்பொடியைக் கொணர்ந்து தேகமெங்கும் பூசு
வரும்வினையை அறுத்து விடும்மாலடியைப்பேசு [அ]
பொங்குதவன் மேலாசை போயழைத்துவாடி
எங்குமெல்லா மாய்த்தோன்றும் எம்பெருமானேடி [அ]
|
|