| |
|
அறம்புரியாதார் மனம்போல்
|
|
நீலாம்பரி ராகம் திரிபுடை தாளம்
கண்ணிகள்
அறம்புரியாதார் மனம்போல் அழுக்குற்றதே நெஞ்சம்
கறவைகள் பின்னாலேவரும் காளையின் தாள் தஞ்சம் [அ]
பரிகொடுத்தவர்போலப் பரதவிக்குதே யென்னெஞ்சம்
கரியதிருமேனியன் கமலப்பதம் தஞ்சம் [அ]
திங்களிலாராவதுபோல் திகழ்கின்றதே நெஞ்சம்
எங்கள் திருவெங்கடேசன் இணையடிகள் தஞ்சம் [அ]
ஆத்மசம்பந்தமிருக்க அகலநடந்தானே
சாத்வீ கதெய்வமென நான் சரணமடைந்தேனே [அ]
பற்றுதேடி அடிவயிற்றில் பாலனைப்போய்ப் பாராய்
நற்றுழாய்மாலை மார்பனை நாடியிவைகூறாய் [அ]
எக்குற்றங்களும்கொண்டருளும் எம்பெருமானே
மக்களைப்பெறாதமலடி மனங்கொண்டானே [அ]
வெயிலிலகப்பட்ட புழுபோலமெலிந்தேனே
கயல்விழியேபோடியே யென்கருத்துற நொந்தேனே [அ]
நற்பூசையான் செய்திருந்தால் நண்ணுமோவித்துன்பம்
அற்புதலீலைகள் செய்வானே ஆச்சியரின்பன் [அ]
கண்பஞ்சம்தீர எப்போதடைகுவானோ கண்ணன்
வீண்கதிர்மதிகண்களாய் விளங்கும் பச்சைவண்ணன் [அ]
என்னைப்போலப்பாவிகள் ஈரேழ்புவன த்துண்டோ
என்னென்று பொறுப்பேனய்யோ இப்படியுமுண்டோ [அ]
|
|