| |
|
அடியார்களை நிந்தித்தபசாரக் கடலில்
|
|
ஆனந்தபைரவி ராகம் அட தாளம்
கண்ணிகள்
அடியார்களை நிந்தித்தபசாரக் கடலில் வீழ்ந் தழியாதே
அல்ல லொழியாதே பொல்லாப்பழி யீதே
தொல்லை அவனியில் மீதே அய்யோ நெஞ்சமே
கண்ணன் யா தனாச் சடலமெடுத்து நரகவாசம் பண்ணச் செய்யுமடா [அ]
இருளார் சடவினைத் துயரமே
யிடமாக் கொடுத்திடுமடா [அ]
மனிதச்சடல மெடுத்ததற்கு
கிடைத்த திது தானா [அ]
ஸ்ரீமான் உடையவரிடத்தில்
அடையாளங்கள் பெற்றிடும் [அ]
பெருங்குடையாய் கோவர்த்தனமதை
பிடித்த கோபால கிருஷ்ணன் [அ]
அய்யோ மடையர்போல் தடையின்றி
லொட லொடனப் பேசி [அ]
இப்படி வானளந்தவன் பால்
குடியா யிருக்கு முயர் [அ]
பாற்கடலைக் கடைந்தவன் றன்
அடிமேலாசை வைத்தாடும் [அ]
சன்மயிடர் ஒழிந்திட நல்ல தடத்தில்
நடனம் பண்ணும் [அ]
இப்படி பாரம் தீர்த்த வனடியைப்
பாடி மகிழும் [அ]
உப்புக்கடலை யடைந்த தன்மேல்
நடந்த நம் காகுத்தன் [அ]
வாய் வெடு வெடுப்பாய் பேசி
மடியும் துர்புத்தியுடன் [அ]
ஸ்ரீமான் வடபத் ராரியர்
பதம் பிடித்துக் கடைத்தேறும் [அ]
பாம்பின் படங்கள் கிடு கிடென
நடித்த நடன கிருஷ்ணன் [அ]
|
|