| |
|
அடியார் திருவடியைப்பணி நீ
|
|
நாதநாமக்ரியா ராகம் ஆதி தாளம்
பல்லவி
அடியார் திருவடியைப்பணி நீ நெஞ்சே அல்லும் பகலும்
ஆடியார் திருவடியைப்பணி நீ நெஞ்சே
அநுபல்லவி
மடியாதே படியளந்தோனடி பிடித்து
கடைத்தேறப் படித்து நடக்கிற [அ]
சரணங்கள்
கற்றதத்தனையும் பாழாக்காதே கலங்காதே
கற்றதத்தனையும் பாழாக்காதே பாடி பல
பெற்றம் மேய்த்தவன் பொற்றாள்
சித்தமதில் வைத்து நித்தம் துதித்தாடும் [அ]
பொல்லா வழிசெல்லாதே நீ நெஞ்சே அல்லல் விளையும்
பொல்லாவழி செல்லாதே நீ நெஞ்சே எங்கும்
எல்லாமாய் நின்றவனிணையடி நல்ல வெல்லமென
அல்லும் பகலும் புல்லுமடியார் [அ]
தேகமென்பது அநித்யம் கேளாய் மோஹத்தை விடுவிடு
தேகமென்பது அநித்யம் கேளாய்--கடல்
காகம்போலக் கலங்காது பாற்
ஸாகர ஸயனனை தாகமுடன் தொழும் [அ]
மடவார் பின் திரியாதே நீ நெஞ்சே மடமை கொடுக்கும்
மடவார்பின் திரியாதே நீ நெஞ்சே
வடபத்ரஸாயி அரையர் தொழும்
நடனகோபாலனை திடமுடனே நம்பும் [அ]
|
|