ஸ்ரீமந் நடனகோபால நாயகியின் புகழ் பரப்புவதில் உடல், பொருள்,உள்ளத்தால் சிறந்த சேவை
செய்து ''நாயகி கைங்கர்ய பூஷணம்'' என்ற பட்டத்தைப் பெற்றவர் மதுரை 'ராணி சாரீஸ் '
ஸ்தாபகர் ராணி.வெ.சுந்தர்ராவ் அவர்கள். அவரைப் போலவே அவருடைய திருக்குமாரர்களும்
சுவாமிகளின் புகழைப் பரப்பும் சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாயகி சுவாமிகளின்
கீர்த்தனைகள் ஆய்வுக் கருத்தரங்கம் சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
தங்களது தகப்பனாரின் நினைவாக நாயகி சுவாமிகளின் வைணவ தத்துவத் தமிழ் பாடல்களை 'பத்ம
ஸ்ரீ' டாக்டர் T.M. சௌந்தரராஜன் அவர்களை பாடவைத்து ஒலி நாடாவில் பதிவு செய்துள்ளார்கள்.
அப் பாடல்களை இந்த சி.டி.யில் பதிவு செய்துள்ளோம். 'ராணி சாரீஸ்' நாயகி கைங்கர்ய
பூஷணம் R.V. சுந்தர்ராவ் அவர்களின் திருக்குமாரர்களுக்கு நன்றியை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.
'ராணி சாரீஸ்' R.S. சாந்தாராம் முந்நாள் தலைவர் ஸ்ரீமந் நாயகி பிருந்தாவனத் திருக்கோயில்
இவர் தம் தந்தையார் காலத்தில் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
திருக் கோயிலில் ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகளுக்குத் தனி சந்நிதி
ஏற்படுத்தி, சுவாமிகளின் விக்ரகம் பிரதிஷ்டை செய்து குடமுழுக்குச்
செய்வதற்குத் துணை நின்றார். கீதா நடன கோபால நாயகி மந்திரில் ஸ்ரீ
தாஸ ஆஞ்சநேயர் சந்நிதி கட்டி மஹா சம்ப்ரோக்ஷணம் செய்வதற்கு முழு
முதற் காரணமாக இருந்தார். பின்னர் ஸ்ரீமந் நடன கோபால நாயகி
பிருந்தாவனத் திருக்கோயில் சபைத் தலைவராகப் பொறுப்பேற்று அத் திருக்
கோயிலில் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா ஸமேத ஸ்ரீ வேணு கோபாலுக்குத்
தனிசந்நிதியும், ஸ்ரீமந் நடன கோபால நாயகிக்குத் தனி சந்நிதியும், ரூபாய்
25 லட்சம் வரை வசூல் செய்து திருப்பணி செய்து மஹா சம்ப்ரோக்ஷணம்
செய்து மங்காப் புகழ் பெற்றவர்.
மேலும் மதுரை மகாலிங்கம் சந்தில் வேதாத்யயன சபைக்குப் பாத்தியப்
பட்ட ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக் கோயில் திருப்பணிக்குழுத் தலைவராக இருந்து
வசூல் செய்து முற்றிலும் புதிதாக கட்டி மஹா சம்ரோக்ஷணம் செய்துள்ளார்.
பின்னர் சாந்தாராம் அவர் தம் சகோதரர்களும் இணைந்து நாயகி சுவாமிகள் கீர்த்தனைகளில்
பல்வேறு தலைப்புகளில் பல அறிஞர்களைக் கொண்டு ஒரு கருத்தரங்கத்தை நடத்தினார்.
அக்கருத்தரங்கில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து 'பிறவாத் திரு வாழ்வு'
என்னும் தலைப்பில் அரிய நூலாக வெளியிட்டு உதவியுள்ளார்.
ஸ்ரீ சாந்தாராம் அவர்கள் தம் ஐம்பத்தொன்றாம் ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில்
சௌராஷ்டிர மொழிக் கீர்த்தனைகள், தமிழில் பாடப்பட்டுள்ள கீர்த்தனைகள் ஐம்பத்தொன்றைத்
தேர்ந்தெடுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார்.